Categories: சினிமா

வாரிசு படம் காபியா? படம் ரிலீஸ்க்கு முன்பே ப்ளூ சட்டை மாறனின் திரைவிமர்சனம்..

வெளியிட்டது

வாரிசு படத்தின் கதை காப்பியடிக்கப்பட்டது என்று சொல்லி ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவர் தான் இளைய தளபதி விஜய் அவர்கள். சமீபத்தில் வெளியான அனைத்துப் படங்களும் 100 கோடி வசூலை அள்ளியது என்று சொன்னால் அது மிகையில்லை. 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் பல அவமானங்களை சந்தித்து இன்று இந்த உயரத்தை அடைந்து இருக்கிறார். ஆரம்பத்தில் காதலை மையமாக கொண்ட படங்களில் நடித்து வந்த விஜய் பின்னாளில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். தற்போது காதல் கலந்த ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கைவசம் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஒன்று தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66. இந்த படம் “வாரிசு” என்ற தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

வாரிசு படம் காபியா? படம் ரிலீஸ்க்கு முன்பே ப்ளூ சட்டை மாறனின் திரைவிமர்சனம்.. 1

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்து முடிகின்ற தருவாயில் உள்ளது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் தளபதி 67 படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் விஜய். இந்த நிலையில் தளபதி 66 படமான வாரிசை கலாய்த்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். பொதுவாக ஒரு படம் வெளியான பின்புதான் கலாய்ப்பது வழக்கம். ஆனால் விஜயின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான அன்றே ப்ளூ சட்டை சர்ச்சை கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் வாரிசு படம் காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அதில் அவர் 2008ம் ஆண்டு வெளிவந்த லார்கோ வின்ச் படத்தையும் வாரிசு கதையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் ட்விட்டர் பதிவில், லார்கோ வின்ச் 2008 திரைப்படம்: ஒரு சக்திவாய்ந்த கோடீஸ்வரர் கொல்லப்பட்ட பிறகு, அவரது இரகசிய வளர்ப்பு மகன் தனது சட்டபூர்வமான தன்மையை நிரூபிக்க, அவரது தந்தையின் கொலையாளிகளைக் கண்டுபிடித்து, அவரது நிதி சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்க போட்டியிட வேண்டும். வாரிசு – அதிகாரப்பூர்வ ரீமேக்கா? அல்லது இன்ஸ்பிரேஷன் படமா? அல்லது காப்பியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பொதுவாக படம் வெளியான பின்புதான் அதை கெடுக்கும் வகையில் விமர்சனம் செய்வார். இந்த முறை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தவுடனேயே படத்தின் கதையை சொல்லி தளபதியின் உழைப்பை கெடுத்துவிட்டதாக ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்