தமிழக அரசியலில் இன்று பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். தமிழக அரசியலில் இன்று மிகப்பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அதாவது தளபதி விஜய் தற்போது “தமிழக வெற்றி கழகம்” என்கிற புது கட்சி ஒன்றை தொடங்கியிருக்கிறார். தமிழகத்தில் ஏற்கனவே பல கட்சிகள் இருக்கும் நிலையில், விஜயின் இந்த அறிவிப்பு அனைத்து கட்சிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய், கட்சி ஆரம்பித்தால் பல அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி என்ன ஆகும்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

“வருகிற 2024ம் ஆண்டு தேர்தலில் போட்டியில்லை. நமது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான். விரைவில் கொள்கை, கொடி, சின்னம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும். எனக்கு அரசியல் என்பது தொழில் அல்ல. அது என்னுடைய வேட்கை. தமிழக மக்களின் நலனுக்காக இனி முழு நேரமாக அரசியலில் இயங்கப் போகிறேன். ஊழல் ஒருபுறம், மத அரசியல் ஒரு புறம் என சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்காக அரசியல் களம் காண இருக்கிறேன்” என விஜய் இன்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவரின் இந்த அறிவிப்பை பலரும் விமர்சித்து வருகின்றனர். ரசிகர்கள் பலர் ஆதரித்து வருகின்றனர்.
காமராசரையே தோற்கடித்த பூமி இது, சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்து இறுதியில் என்ன நிலைக்கு ஆளானார்? என்பதையெல்லாம் விஜய் யோசிக்க வேண்டும் என்று அறிவுரையும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, “ரஜினிகாந்தை போல 25 வருடங்கள் ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து கடைசியில் கட்சி ஆரம்பிக்காமல் ஓடவில்லை. கமலஹாசனை போல பார்ட் டைம் அரசியலும் செய்யப் போவதில்லை. அந்த வகையில் இவர்களை விட விஜய் எவ்வளவோ மேல்.
யாருக்கு எதிரான அரசியல் செய்யப் போகிறார்? என்ன கொள்கை? என்பதை பொறுத்து பாராட்டவோ விமர்சிக்கவோ படலாம். இனி தமிழக அரசியல் ஸ்டாலின் வெர்சஸ் விஜய் அல்லது உதய் வெர்சஸ் விஜய் என்ன அரசியல் திசை நோக்கி நகரும்” என அவர் பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அவரின் இந்த பதிவிற்கு கீழே, ரசிகர்கள் பலரும், “மாற்றத்தை எதிர்பார்த்து விஜயை நோக்கி காத்திருப்பதாகவும், உதய வெர்சஸ் விஜய் என்கிற நிலை தமிழ்நாட்டிற்கு நல்லது” என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Twitter Original Source From: Blue Sattai Maran