Categories: சினிமா

செண்டிமெண்ட்-ங்கிற பேருல நெஞ்ச ஓவரா நக்கிட்டாங்க..கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை | Don Review

வெளியிட்டது

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியாகி இருந்தது டான் திரைப்படம். இந்த படத்தை புதுமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார். இன்ஜினியரிங் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்து இருப்பார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, RJ விஜய், பாலா போன்றவர்களும் நடித்து இருந்தனர். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று இருந்தது. இந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் டான் படம் குறித்து விமர்சனங்களை வைத்துள்ளார்.

செண்டிமெண்ட்-ங்கிற பேருல நெஞ்ச ஓவரா நக்கிட்டாங்க..கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை | Don Review 1

எப்பேர்பட்ட இயக்குநராக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி, சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்பவர் தான் மாறன்.  டான் படத்தின் நீளம் மிக அதிகமாக இருப்பதாகவும், நீளத்தைக் குறைத்தால் இந்த படம் நன்றாக இருக்கும் என்று கூறினார். வசூல்ராஜா எம்பிபிஎஸ், நண்பன் படங்கள் மாதிரி எடுக்குறேன்னு கல்லூரி சீன்கள் எடுக்க முயற்சி செய்துள்ளார்கள், ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்றும் கூறினார். படத்தின் முதல் பாகம் நன்றாக ஆரம்பித்து எப்படா இடைவேளை வரும்? என்று யோசிக்கும் அளவிற்கு வழ வழ என்று இழுத்தடித்து விட்டார்கள், சிலர் எழுந்தும் போய்விட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

கல்லூரி காட்சிகளை திரும்ப திரும்ப காட்டியதால் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு ஏற்பட்டுவிட்டது என்று விமர்சித்தார். மேலும் SJ சூர்யாவின் நடிப்பு மட்டுமே இந்த படத்திற்கு பலம் என்று ப்ளூ சட்டை கூறினார். மேலும் இன்ஜினியரிங் பிடிக்கவில்லை என்றால் குறும்படம் எடுத்து கூட பிழைக்கலாம் என்று படத்தில் சொன்னதை நம்பி சென்னைக்கு கிளம்பி வந்துவிடாதீர்கள், அப்படி வந்தால் சிவகார்த்திகேயனே அவர் அலுவலகத்துக்குள் உங்களை விடமாட்டார் என்றும் கலாய்த்து தள்ளினார் மாறன். இறுதியாக முடிக்கும் போது சமீபத்தில் வெளிவந்த படங்களுக்கு டான் படம் எவ்வளவோ தேவலாம் என்று கூறினார். வீடியோவை நீங்களும் காண… Watch the Below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்