Black Sheep இந்த யூடியூப் சேனலை தெரியாத ஆட்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பிரபலம். இதன் ஓனர் விக்னேஷ்காந்த். ரேடியோவில் ஆர்.ஜேவாக தனது வாழ்க்கையத் தொடங்கிய இவர் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். இவருடன் இணைந்து தற்போது குக் வித் கோமாளியில் குக்காக பங்கேற்றுள்ள அரவிந்தும் இணைந்து சிறு சிறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். பிறகு பல தரமான தொடர்களை ஆரம்பித்து இன்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு சேனல் பல சேனலாகவும் மாறியுள்ளது.

இதில் நடித்த நாகேந்திர பிரசாத், ஆயஸ், நந்தினி, ராம் நிஷாந்த், பவி டீச்சர் போன்ற அனைவரும் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர். சிலருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் படங்களில் சிறு வேடங்களில் நடந்து வந்தார் விக்னேஷ்காந்த். பின்னர் ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து மீசைய முறுக்கு படத்தில் நடித்தார். பின்னர் Black Sheep கம்பெனியை விரிவுபடுத்தும் விதமாக BS Value என்ற ஆண்ட்ராய்டு ஆப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். Youtube Video Code Embed Credits: Galatta

இவருக்கு இன்று திடீரென நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. யாரையும் அழைக்க முடியவில்லை. கல்யாணத்திற்கு கண்டிப்பாக அனைவரையும் அழைக்கிறேன், கல்யாண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் காந்த். அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Watch the below video