கேங்ஸ்டராக மாறி மிரட்டி எடுத்துள்ள துல்கர் சல்மான்.! கிங் ஆஃப் கோதா படத்தின் ட்ரைலர் வெளியானது.!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகனாக இருக்கும் துல்கர் 2012ம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலமாக மலையாள திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். ஆனால் முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. பின்னர் இரண்டாவதாக உஸ்தாத் ஹோட்டல் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் மிகப் பெரிய வெற்றியை கொடுக்கவே அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தமிழ் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேங்ஸ்டராக மாறி மிரட்டி எடுத்துள்ள துல்கர் சல்மான்.! கிங் ஆஃப் கோதா படத்தின் ட்ரைலர் வெளியானது.! 1

விளம்பரம்

வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் பெங்களூரு டேஸ், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹே சினாமிகா, சீதா ராமம் போன்ற படங்களில் நடித்து பலரின் மனங்களை கொள்ளை கொண்டார். தற்போது அவர் ஆக்ஷன் படமான கிங் ஆஃப் கோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, பிரசன்னா, அனிகா சுரேந்திரன், டான்சிங் ரோஸ் சபீர் போன்ற பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  யோகி பாபுவுடன் இணைந்து மாரிமுத்து நடித்த கடைசி படம்..! 'தூக்கு துரை' படத்தின் ட்ரைலர் வெளியானது..!

கேங்ஸ்டராக மாறி மிரட்டி எடுத்துள்ள துல்கர் சல்மான்.! கிங் ஆஃப் கோதா படத்தின் ட்ரைலர் வெளியானது.! 3

விளம்பரம்

மேலும் ஹிந்தியில் ஒரு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் துல்கர். தற்போது இவர் நடித்து முடித்துள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொத்தம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அபிலாஷ் என்பவர் இயக்கி இருக்கிறார். கால் பந்தாட்டம் மற்றும் கோதா என்ற இடத்தை கைப்பற்றும் கேங்ஸ்டராக துல்கர் நடித்துள்ளார். தற்போது அந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியுள்ள ட்ரைலர் வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Zee Studios

விளம்பரம்

Leave a Comment