Categories: சினிமா

ஆடியோ லான்ச் வச்சு கூட துணிவு ட்ரைலரை முந்த முடிலயே.! வாரிசை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.!

வெளியிட்டது

வாரிசு ஆடியோ லான்ச் நடத்தியும், துணிவு படத்தின் ட்ரைலரை முந்த முடியவில்லையே என்று ப்ளூ சட்டை மாறன் தற்போது கலாய்த்து பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். வாரிசு படத்தின் ட்ரைலர் 24 மணி நேரத்தில் துணிவு பட டிரைலரை முந்தவில்லை என்று ஏற்கனவே அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்து வரும் நிலையில், தற்போது ப்ளூ சட்டை மாறனும் அந்த வரிசையில் இணைந்திருக்கிறார். துணிவு ட்ரைலரில் Ads போட்டு தான் வியூஸ் அள்ளினீர்கள் என்று விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களிடம் வம்பிழுத்து வருகின்றனர். ஆடியோ லான்ச் நடத்தாமலேயே துணிவு படத்தின் வியூஸ் இவ்வளவு இருக்கிறது ஆனால் வாரிசு படம் ஆடியோ லான்ச் நடத்தியும் துணிவு படத்தை முந்தவில்லை என்று கலாய்த்து ப்ளூ சட்டை பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே வாரிசா துணிவா என்ற போட்டி இணையத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே நடந்து வருகிறது. தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கியும் ட்ரைலரை விமர்சித்தும் பதிவுகளை தொடர்ந்து போட்டு வருகின்றனர்.

ஆடியோ லான்ச் வச்சு கூட துணிவு ட்ரைலரை முந்த முடிலயே.! வாரிசை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.! 1
விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இவ்வாறு மோதிக் கொள்வதை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தற்போது எரிகிற நெருப்பில் சிறிது எண்ணெயை ஊற்றி இருக்கிறார். துணிவு படத்தின் டிரைலர் தற்போது வரை 55 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து முதலிடம் வகித்து வருகிறது. 24 மணி நேரத்தில் துணிவு படத்தின் டிரைலர் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்தது. நடிகர் அஜித் சமீபகாலமாக எந்த படத்தில் ப்ரமோஷனுக்கோ, ஆடியோ லான்ச்க்கோ வருவதில்லை. இருந்தாலும் அவரது படங்களின் ட்ரைலர்களும், படங்களும் சாதனை படைத்து வருகிறது. அஜித்தே ஒரு முறை நல்ல படங்களுக்கு அந்த படம்தான் சிறந்த பிரமோஷன் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாரிசு படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான போது 24 மணி நேரத்தில் 23 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்று இருந்தது. மேலும் ட்ரெய்லர் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகியும் 33 மில்லியன் பார்வையாளர்களை தாண்ட முடியாமல் திணிறி வருகிறது வாரிசு படத்தின் டிரைலர்.

இதை கவனித்த விஜய் ரசிகர்கள் நீங்கள் உங்கள் ட்ரைலரில் விளம்பரங்களை போட்டு பார்வையாளர்களை தேடிக்கொண்டீர்கள். துணிவு ட்ரெய்லருக்கு Ads நிறைய இருப்பதால் அதிகமான வியூஸ் வருகிறது. ஆனால் வாரிசுக்கு Ads இல்லை என்று விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களிடம் விளக்கம் அளித்து வந்தனர். இந்த நிலையில் இதைப்பற்றி ப்ளூ சட்டை மாறன் ஒரு விமர்சனத்தை போட்டு இருக்கிறார் .அதில் துணிவுக்கு ஆடியோ லான்ச் ப்ரொமோஷன் எதுவும் செய்யவில்லை. எந்த ப்ரமோஷனும் செய்யாமல் அஜித் வராமலேயே இவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று அஜித் ரசிகர்கள் கூறுவது போல பதிவை போட்டு இருக்கிறார். இது விஜய் ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றுவதை போல் இருக்கிறது. ஏற்கனவே விஜய் அஜித் ரசிகர்கள் மோதி கொண்டிருக்கும் நிலையில்,, தற்போது எரிகிற நெருப்பில் ப்ளூ சட்டை மாறன் தன் பங்குக்கு கொஞ்சம் எண்ணெயையும் ஊற்றி இருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்