Categories: சினிமா

நடிகர் தாமு மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – ப்ளூ சட்டை மாறன் போர்க்கொடி.!

வெளியிட்டது

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்துகிறேன் என்ற பெயரில் மாணவர்களின் உணர்வுகளைத் தேண்டி அழ வைக்கும் நடிகர் தாமு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ப்ளூ சட்டை மாறன் திடீரென போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார். 1992ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் தாமு. இவர் ‘காதலன், பாட்ஷா, லவ் டுடே, அமர்க்களம்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ‘கில்லி’ திரைப்படத்தில் ஓட்டேரி நரியாக இவர் நடித்த பின்பு இவருக்கு திருப்புமுனை ஏற்பட்டது. மேலும் மிமிக்ரி கலைஞராகவும் பல படங்களில் பின்னணி பேசி இருக்கிறார். பல மேடைகளில் மிமிக்ரி கலைஞராக தோன்றியிருக்கிறார். நடிகராக இருந்து வந்த தாமு திடீரென கல்வி சேவை பக்கம் தனது கவனத்தை திருப்பினார். கடந்த பத்து வருடங்களாக கல்வி சேவையாற்றி வருகிறார் தாமு.

நடிகர் தாமு மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - ப்ளூ சட்டை மாறன் போர்க்கொடி.! 1

பள்ளி கல்லூரிக்குச் சென்று மாணவர்களிடையே ஊக்கப்படுத்தும் விதமாக பேசி அவர்களை நல்வழிப்படுத்தி வருகிறார். அவரின் இந்த சேவையை பாராட்டி தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ‘ராஷ்டிய சிக்ஷா கௌரவ் புரஸ்கார் 2021’ என்கிற தேசிய கல்வியாளருக்கான விருதும் தாமுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமீப காலாமாக தாமுவின் சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியது. பள்ளி கல்லூரிகளுக்கு சிறப்பு பேச்சாளராக செல்லும் தாமு மாணவர்களை நல்வழிப்படுத்துகிறேன் என்கிற பெயரில் பெற்றோர்கள் படும் கஷ்டங்களை எடுத்து பேசி வருகிறார். சில சமயம் அவர் பேச்சு மிகையாக போகும் நிலையில் குற்ற உணர்ச்சியால் மாணவ, மாணவிகள் கதறி அழுகின்றனர்.

இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியது. பலரும் எதற்காக மாணவர்களின் எமோஷனலுடன் தாமு விளையாடுகிறார்? என்று கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், “மாணவிகளை அழ வைத்து போலியான எமோஷனை கிளறிவிடும் இந்த நடிகர் இனி பள்ளி கல்லூரி மேடைகளில் பேசுவதை தடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கூற ஆரம்பித்துள்ளனர். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் உடனே எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவை பார்த்த சிலர், “மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொழுது, பெற்றோர்கள் படும் துன்பத்தை கூறும் பொழுது மாணவர்கள் எமோஷனல் ஆகி அழுவது ஒன்றும் பெரிய குற்றம் கிடையாது, இதை ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்று அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலரோ ப்ளூசட்டை மாறனின் இந்த பதிவை ஆதரித்தும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Twitter Original Source From: Blue Sattai Maran

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்