பிரபல சினிமா விமர்சகரா வலம் வருபவர் தான் மாறன். இவர் நீல சட்டையை போட்டுகொண்டு விமர்சனம் செய்வதால் இவருக்கு ப்ளூசட்டை மாறன் என பெயர் வந்துள்ளது. இவரை தெரியாத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. படத்திற்காக எதிர்பார்ப்பதை விட இவரின் விமர்சனத்திற்கு எதிர்பார்க்கும் ரசிகர்கள் தான் தற்போது அதிகம். தொடர்ந்து படங்களை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ப்ளூசட்டை மாறனுக்கு எதிரிகளும் அதிகம் தான். இவர் இயக்கிய ஆன்டி இந்தியன் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் ரசிகர்கள் இவரை பங்கமாக கலாய்த்து இருந்தனர்.

இந்நிலையில் அண்மையில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்து விமர்சனம் செய்து இருந்த இவர், அவரின் தனிப்பட்ட விஷயங்களை தாக்கி பேசி உள்ளார். இதற்கு பெரும் எதிர்ப்பு தற்போது கிளம்பி உள்ளது. சினிமாவை பற்றி விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு எதற்கு தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என கண்டனங்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக உருவாகி உள்ளது.
இந்நிலையில்,ப்ளூ சட்டை மாறனின் இந்த பேச்சுக்கு நடிகர் கலையரசன் கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்,ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதும் அதில் தவறான கருத்து ஏதும் இருந்தால் அதை கண்டிப்பதும் அவரவர் உரிமை, முழு வெறுப்போடு ஒருவரை விமர்சனம் எனும் பெயரில் இப்படி அருவுறுப்பாக தனிமனித தாக்குதல் செய்வதென்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறி உள்ளார்.