தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கி உள்ளார். ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு இனி படத்தில் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்து உள்ளார்.2026 சட்டமன்ற தேர்தல் இலக்கு என கூறிய அவர் யாருடனும் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை அண்மையில் விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக நடத்தி உள்ளார் .

பல லட்சம் ரசிகர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து நடிகர் விஜயை காண கூட்டமாக வருகை தந்து உள்ளனர். மாலை நடைபெறும் மாநாட்டிற்கு காலையிலேயே அனைவரும் வந்ததால், சீக்கிரமாக விஜய் மாநாட்டை நடத்தி உள்ளார்.இந்த மாநாட்டில் தங்களது அரசியல் எதிரிகள் பாஜக மற்றும் திமுக என கூறி இருந்தார். இந்நிலையில் அரசியலுக்கான வேளைகளில் மும்முரமாக இறங்கி இருக்கும் விஜய், இன்று ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார்.

நீட் தேர்வு ரத்து,மாதம் மாதம் கரண்டு பில் ரீடிங் , மதுக்கடை ஒழிப்பு என 21 தீர்மானங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நடிகர் விஜயின் ஆலோசனை கூட்ட புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.
