டேய் 2k பூமர்ஸ்.! இன்னும் என்ன என்ன கூத்தெல்லாம் நடக்க போகுதோ? கடுப்பான ப்ளூ சட்டை மாறன்.!

வெளியிட்டது

திரைப்படங்களை தனது கடுமையான விமர்சனங்களால் விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது லோகேஷ் கனகராஜ் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து 2K கிட்ஸ்களை சாடி பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ஏதாவது பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜின் வீடியோ ஒன்றைப் பகிர்ந்தி அவர் காட்டமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

டேய் 2k பூமர்ஸ்.! இன்னும் என்ன என்ன கூத்தெல்லாம் நடக்க போகுதோ? கடுப்பான ப்ளூ சட்டை மாறன்.! 1

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் தற்போது ஒரு முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனியார் வங்கியில் பணியாற்றி வந்த அவர், சினிமா மீது இருக்கும் ஆசையின் காரணமாக அந்த வேலையை விட்டுவிட்டு தற்போது இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார். இவர் இயக்கிய முதல் படம் மாநகரம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே விஜய், கமல், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வருகிறார்.

தற்போது மீண்டும் தளபதி விஜயுடன் கூட்டணி வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை பிஸியாக இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவர் கோயமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மாணவி ஒருவருக்கு பரிசு கொடுக்க அவர் சட்டென்று லோகேஷ் கனகராஜின் காலில் விழுந்தார். இதனால் கோபமடைந்த லோகேஷ் கனகராஜ் அவரை எழுப்பி விட்டு, கடுமையான முகத்துடன் ஏம்மா?? என்று கேட்டுவிட்டு அந்த பெண்ணை அனுப்பி வைத்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் தற்போது ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை கூறி இருக்கிறார்.


அதில் 2k பூமர்ஸ் என்று சொல்லிவிட்டு “லோகேஷ் கனகராஜ் மானஸ்தர் என்பதால் அம்மாணவியை கடிந்து கொண்டார், கல்லூரி வளாகத்தினுள் பட ப்ரமோஷனுக்காக திரைப்படக் கலைஞர்களை அனுமதிக்கும் போக்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவுகள் இவை, இன்னும் என்னென கூத்தெல்லாம் அரங்கேற போகிறதோ? என்று சொல்லி அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். வழக்கமாக திரைப்படங்களையே விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது சமூகத்தில் நடக்கும் சில விஷயங்களையும் பகிர்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது..!


Twitter Original Source From: Blue Sattai Maran

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்