நடிகை நயன்தாரா தற்போது தனது மகன்களை கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. என்னுடைய உயிர் என்றும், ஞாயிற்றுக்கிழமை இப்படியாக செலவானது என்று அவர் அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.

மலையாளத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளனியாக தனது வாழ்க்கை ஆரம்பித்த அவர் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஐயா என்கிற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். திரைத்துறைக்கு வந்து சுமார் 20 ஆண்டுகளில் 75 படங்களுக்கும் மேல் நடித்து தென்னிந்திய திரையுலகில் டாப் ஹிட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தமிழில் கைவசம் தனது 75 வது படத்திலும், டெஸ்ட் என்கிற அடுத்த படத்திலும் நடித்து வருகிறார். முதல் முறையாக ஹிந்தி பக்கம் சென்றிருக்கும் நயன்தாரா ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்க, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் இறைவன் என்கிற ஒரு படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவருக்கும் இவருடைய காதலன் விக்னேஷ் இவனுக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார் நயன்தாரா.

வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்ற அவர், உயிர் ருத்ரோனில், உலக் தெய்விக் என்று தன் மகன்களுக்கு பெயர் வைத்துள்ளார்.

குழந்தைகளின் முகத்தை வெளியில் காட்டாமல் அவர்கள் முகம் தெரியாதது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் நயன்தாரா. இந்த நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தனது மகனை வைத்து கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படத்தை அவர் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த புகைப்படங்களுக்கு தற்போது லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது. பலரும் விரைவில் முகத்தை காட்டுமாறு விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிகளுக்கு வேண்டுகோள் எடுத்து வருகின்றனர்.