முடிவுக்கு வந்தது Sun TV-யின் மெகா சீரியல்.! நன்றி சொல்லி நடிகர்கள் வெளியிட்ட வீடியோ இதோ.!

சன் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் ஒன்று தற்போது நிறைவடைந்து இருக்கும் செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நெடுந்தொடர்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சி தற்போது மதியம் தொடங்கி இரவு வரை பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக 700 எபிசோடுகளை ஒளிபரப்பி வந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர இருக்கும் செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முடிவுக்கு வந்தது Sun TV-யின் மெகா சீரியல்.! நன்றி சொல்லி நடிகர்கள் வெளியிட்ட வீடியோ இதோ.! 1
திருமகள் சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது. இதில் ஹரிகா, சுரேந்தர், ஷமிதா, வெங்கட், ரேவதி சங்கர், சுஷ்மா நாயார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் ஹரிகா, அஞ்சலி என்கிற கதாபாத்திரத்திலும், சுரேந்தர், ராஜா பரமேஸ்வரன் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  சத்தமில்லாமல் காதலியுடன் திருமணத்தை முடித்த சன் டிவி சீரியல் நடிகர்.! நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.!

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே திருமகள் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இந்த நாடகத்தின் நடித்து வரும் நடிகர் சுரேந்தர் தனது instagram பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், திருமகளின் கடைசி ஷூட்டிங் இது, நீங்கள் அனைவரும் இந்த தொடரை விரும்பி பார்த்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். புதிய அத்தியாயத்தில் மீண்டும் சந்திக்கிறேன், ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி, சன் தொலைக்காட்சி, சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி, திருமகள் சீரியல் ரசிகர்களுக்கும் மிக்க நன்றி” என்று பதிவிட்டு இருக்கிறார்.

முடிவுக்கு வந்தது Sun TV-யின் மெகா சீரியல்.! நன்றி சொல்லி நடிகர்கள் வெளியிட்ட வீடியோ இதோ.! 3
இந்தப் பதிவிற்கு கீழே பலரும் இந்த நல்ல சீரியலை நாங்கள் மிஸ் செய்கிறோம். இது பிரைம் டைமில் ஒளிபரப்பாகி நன்றாக வந்திருக்க வேண்டிய சீரியல், இருந்தாலும் இது நல்லபடியாக முடிந்து விட்டது என்று சொல்லி பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment