சில நாட்களாக சின்னத்திரை பிரபலங்கள் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சன் டிவி சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஒருவர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

அவருக்கு சின்னத்திரை உலகின் பிரபலங்கள் நேரில் சென்று, திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அபியும் நானும்’ என்கிற சீரியலில் ‘குருவி’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தமிழ் செல்வன். தனது இயல்பான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த சீரியலுக்குப் பின்னர் அவர் தனது பெயரை ‘குருவி தமிழ்செல்வன்’ என சமூக வலைத்தளப் பக்கத்தில் மாற்றிக்கொண்டார்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மிஸ்டர் மனைவி’ மற்றும் ‘புது வசந்தம்’ ஆகிய சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலியான பூர்ணிமா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களின் திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் மற்றும் வரவேற்பு புகைப்படங்களை தமிழ்செல்வன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிந்திருக்கிறார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.