திரைவிமர்சனம் என்ற பெயரில் தொடர்ந்து படங்களை விமர்சித்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். படங்கள் வெளியான அன்றே படத்தை பார்த்துவிட்டு நிறை குறைகளை சொல்கிறேன் என்ற பெயரில் படத்தின் முழு கதையையும் கூறி அதில் உள்ள குறைகளை மட்டுமே கூறுவார். இதனால் இவரை கழுவி ஊற்றுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த வகையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள படம்தான் மாமனிதன். யதார்த்தமான கிராமத்து கதையும், ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் குடும்பத்தலைவன் சந்திக்கும் பிரச்சினை என மாமனிதன் படத்தை இயக்கி இருக்கிறார் சீனு ராமசாமி. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்து இருந்தார்.

விஜய் சேதுபதியை பொறுத்த வரை தனது அயராத உழைப்பு மற்றும் திறமையால் முன்னுக்கு வந்தவர். ஆரம்பத்தில் இவருக்கு துணை வேடங்களில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 30 வயதை கடந்த பின்புதான் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. அன்று தொடங்கி இன்று வரை தனது யதார்த்தமான நடிப்பால் மக்கள் செல்வன் என்ற பெயரை பெற்றுள்ளார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று ஈகோ காட்டாமல் பல படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி 3 படங்களில் நடித்துள்ளார். இவர்கள் காம்போவில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்த படம் மாமனிதன்.
இந்த படம் குறித்தும் வழக்கம் போல தனது விமர்சனங்களை முன்வைத்து இருந்தார் ப்ளூ சட்டஐ மாறன். படம் மிக மெதுவாக செல்வதாகவும், பல லாஜிக் ஓட்டைகள் இருப்பதாகவும், அடுத்து அடுத்து வரும் சீன்களை யூகிக்க முடிந்தது என்றும் கூறினார். விஜய் சேதுபதி ஆட்டோவில் ஏறும் ஒருவர் தனது மகளுக்கு வாங்கிய நகைகளை ஆட்டோவில் விட்டு சென்றதாகவும், திருமணத்திற்கு நகை வாங்க யாராவது அப்பா மட்டுமே போய் வாங்குவார்களா? திருமணத்திற்கு பட்டு எடுக்க போனாலே ஒரு ஊரையே கூட்டிக் கொண்டு போவார்கள் ஆனால் நகை வாங்க ஹீரோயின் அப்பா மட்டும் போனது லாஜிக் இல்லாமல் இருப்பதாக கூறினார். மேலும் இது மெகா சீரியல் போல இருப்பதாகவும் கூறினார்.
இவரின் விமர்சனத்திற்கு இயக்குனர் சீனுராமசாமி பதிலடி கொடுத்துள்ளார். அதில்இனிய மாறா வணக்கம், உங்கள் விமர்சனத்திற்கு எனதன்பு, நகை ஆர்டர் குடுக்க மகளோடு போயிருக்கார் வாங்க தனியா போகலாம் இல்லையா?மனிதனை கொல்லலாம், மாமனிதனை உங்களால் கொல்ல முடியாது என்று ட்வீட் செய்துள்ளார். அதற்கு பதில் அளித்த மாறன் பண்புள்ள சீனா..இனிய வணக்கம். மாமனிதனை இம்மண்னின் மனிதர்கள் கொண்டாடுகிறார்களா அல்லது ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டார்களா என்பது சில தினங்களில் தெரிந்துவிடும். அன்பிற்கு நன்றி. குறிப்பு: தனிப்பட்ட மடலில் யாரையும் Tag செய்து துணைக்கு அழைப்பதில்லை. என்று பதில் அளித்துள்ளார்.