இயக்குனர் அமீர் கதாநாயகனாக கலக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் டீசர் வெளியானது.! வீடியோ உள்ளே.!

தமிழ் திரையுலகில் கவனிக்கப்படும் இயக்குனராக இருக்கும் அமீர் கதாநாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 2002ம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ என்கிற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அதன் பின்னர் ‘ராம்’, ‘பருத்திவீரன்’, ‘ஆதி பகவன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். இது மட்டுமில்லாமல் எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் அமீர் கதாநாயகனாக கலக்கும் 'உயிர் தமிழுக்கு' படத்தின் டீசர் வெளியானது.! வீடியோ உள்ளே.! 1

விளம்பரம்

தற்போது கைவசம் ‘உயிர் தமிழுக்கு’ மற்றும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம் பாவா இந்த படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அமீருடன் இணைந்து சாந்தினி, ஸ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

இயக்குனர் அமீர் கதாநாயகனாக கலக்கும் 'உயிர் தமிழுக்கு' படத்தின் டீசர் வெளியானது.! வீடியோ உள்ளே.! 3

விளம்பரம்

பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன் பாலா இருவரும் இந்த படத்தின் வசனங்களை எழுதி இருக்கின்றனர். அரசியல் கதையை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாகி இருப்பதாக தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் டீசரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Zee Music South

விளம்பரம்

Leave a Comment