ஆக்ஷனில் பட்டையை கிளப்பி இருக்கும் பிரபு தேவா.! ‘முசாசி’ படத்தின் டீசர் வெளியானது.!

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘முசாசி’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. பிரபல நடன கலைஞர் பிரபுதேவா 1994ம் ஆண்டு வெளியான ‘இந்து’ என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர். அதன் பின்னர் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். நடன கலைஞர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரபுதேவா. தற்போது கைவசம் ‘உல்ஃப்’, ‘பேட்ட ராப்’, ‘லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷனில் பட்டையை கிளப்பி இருக்கும் பிரபு தேவா.! 'முசாசி' படத்தின் டீசர் வெளியானது.! 1
மேலும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘முசாசி’ என்கிற திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரபுதேவா உடன் இணைந்து நடிகர்கள் விடிவி கணேஷ், ஜான்விஜய், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஷாம் ரோட்ரிக்ஸ் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். லீ இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதையில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  காதல் மனைவி சயீஷாவின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆர்யா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

ஆக்ஷனில் பட்டையை கிளப்பி இருக்கும் பிரபு தேவா.! 'முசாசி' படத்தின் டீசர் வெளியானது.! 3
ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது டீசர் ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகியிருக்கிறது. ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்று வரும் டீசரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment