Categories: சினிமா

இது ஒரு இத்து போன படம்….யானை படத்தையும் ஹரியையும் வச்சி செய்த ப்ளூ சட்டை.. இந்த மாறி யாரையும் கழுவி ஊத்துனது இல்லை..

வெளியிட்டது

நடிகர் அருண்விஜய் நடிப்பில் நேற்று வெளியாகி இருந்த திரைப்படம் யானை. இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.இதனால் படத்திற்க்கான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இயக்குநர் ஹரி கடைசியாக இயக்கிய படம் சாமி 2. இந்த படம் 2018ம் ஆண்டு வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் வெற்றி பெறவில்லை, எனவே அடுத்த கூட்டணியாக தனது மச்சான் அருண் விஜய்யுடன் இணைந்து யானை படத்தை இயக்கினார் ஹரி. கிராமத்து கதைக்களத்தை பிண்ணனியாக கொண்டு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. மேலும் யோகிபாபு, ராதிகா, போஸ் வெங்கட் போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு இத்து போன படம்....யானை படத்தையும் ஹரியையும் வச்சி செய்த ப்ளூ சட்டை.. இந்த மாறி யாரையும் கழுவி ஊத்துனது இல்லை.. 1

விமர்சனம் என்ற பெயரில் சர்ச்சையான கருத்துக்களை கூறி இணையவாசிகளிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் ஒரு நபர்தான் மாறன். இவரை மாறன் என்று சொல்வதை விட ப்ளூ சட்டை என்று சொன்னால் பலருக்கும் தெரியும். எப்பேர்பட்ட நடிகராக இருந்தாலும் சரி, எத்தகைய இயக்குனர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் நடிக்கும் படங்களை விமர்சனம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார் ப்ளூ சட்டை. ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று கூட புரியாமல் படத்தின் நிறைகளை எல்லாம் விட்டு விட்டு குறைகளை மட்டுமே கூறுகிறார் என்பது இவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஒரு படம் எடுத்து பாருங்கள் அப்போது அந்த கஷ்டம் புரியும் என்று இணைவாசிகள் திட்டி தீர்க்க “ஆன்டி இந்தியன்” என்ற படத்தை எழுதி இயக்கினார். ஆனால் இந்த படமும் சரியாக ஓடவில்லை.

இந்த படத்தில் ஹரி இதுவரை இயக்கி இருந்த 15 படங்களில் நடித்த நடிகர்கள், நடிகைகள், படத்தின் கதை, திரைக்கதை, ஜூனியர் நடிகர்கள், அரிசி மூட்டை அருவா போன்ற செட் ப்ராபர்ட்டி கூட அப்படியே யானை படத்தில் வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இடையில் ரஜினியையும் கலாய்த்து தள்ளினார். கடைசியாக யானை படம் ஒரு இத்து போன மசாலா படம் என்றும் அவர் விமர்சித்தார். அவரின் வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

Youtube Video Code Embed Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்