இந்திய சினிமாவில் நடிகர்களை போல நடிகைகள் கோலோச்சுவது மிகவும் கடினம். எப்படி முயன்றாலும் குறைந்தது 10 ஆண்டுகள் மட்டுமே நீடித்து நிற்க முடியும். அதுவும் முன்னணியில் இருப்பதெல்லாம் எந்த நடிகைக்கு அவ்வளவு எளிதாக நடந்து விடுவதில்லை. ஏனெனில் நடிகைகள் திருமணம் ஆனது பின்னர் அவர்களே சில காலம் ஒதுங்கி விடுவார்கள். இல்லையேல் திருமணமானால் துறையில் இருப்பார்களே அவர்களை நாயகியாக காண்பதில்லை.

இது அனைத்திற்கும் சாட்டை அடிகொடுத்து அறிமுகமாகி 15 ஆண்டுகள் கடந்தோடியும் இன்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நாயகியாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. கேரளாவில் தனியார் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த இவர் மலையாள சினிமா அறிமுகப்படுத்தினாலும், தமிழில் இவர் நடித்த “ஐயா” படமே இவருக்கு மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முதல் படமே நல்ல வெற்றி. அடுத்த படமே மிக பெரிய ஹீரோவான “சூப்பர்ஸ்டார்” ரஜினிகாந்துடன் “சந்திரமுகி” படத்தில் நடித்து மிக பெரிய அறிமுகத்தை பெற்றார்.
பின்னர் தமிழ் மட்டுமின்றி, தென்னிந்தியாவின் அணைத்து முன்னணி நாயகர்களுடனும் இணைந்து படம் நடித்து தமிழிலும், தெலுங்கிலும் யாரும் தொட முடியாத மிக பெரிய உச்சியை தொட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு வெளியான “நானும் ஒரு ரவுடி தான்” பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர, 7 வருடங்கள் காதலித்து கடந்த ஜூன் 9ஆம் தேதி மிக பிரமாண்டமாக சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். பிரபலங்கள் பலரும் வாழ்த்த, மிக ஆரவாரமாக நடந்தேறியது இவர்களது திருமணம்.
இப்பொது தாய்லாந்தில் iஇருந்து தேன்நிலவு கொண்டாடிவிட்டு இந்திய வந்துள்ளனர் நயன் விக்கி தம்பதி. இருவரும் அங்கு எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் பரவவிட்டு வருகிறார்கள். மெஹெந்தி பங்க்ஷனில் துவங்கி, இப்பொது இவர்களுடைய தேன்நிலவு போட்டோக்கள் வரை அனைத்துமே ட்ரெண்ட்டாகி வருகிறது. இப்போது 37 வயதை ஈட்டியுள்ள நடிகை நயன்தாரா திருமண முடிந்த கையேடு மீண்டும் பிஸியாக படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார்.
இந்தியா திரும்பியுள்ள நயன்தாரா முதல் படமாக இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள ஷாருக் கானின் “ஜவான்” படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு மும்பையுள்ள தனியார் செட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வெளியான படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ மிக பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாயகையாக இந்த படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகிறார் நயந்தாரா. படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
நேற்று இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்ற நடிகை நயந்தாராவை படம் பிடிக்க ஊடகவியலாளர்கள் பலரும் முண்டியடித்து கொண்டி ஓடினர். அவர்களை நயன்தாராவின் பாதுகாவலர்கள் அவர்களை பிடித்து தூர தள்ளினார். இது பொதுவாகவே நடக்கூடிய விஷயம் என்றாலும் அங்கிருந்த படிகார்ட் சிலர் செய்தியாளர்களை கொஞ்சம் கறாராக திட்டி உள்ளனர். இதற்கு அங்கிருந்த செய்தயாளர்கள் கண்டனம் தெரிவிக்க சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பாலிவுட் மீடியாகள் பலர் இந்த செயலுக்கு மிகவும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த விடியோவை நீங்களும் காண…
Video Courtesy – Bollywood Now