அண்ணாச்சி கெட்டப்பில் வந்து சிவாவை மரணமாக கலாய்த்த அமுதவாணன்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் இன்று வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றனர். லொள்ளு சபாவில் ஆரம்பித்த சந்தானம் என்று திரையில் மிகப்பெரிய காமெடி நடிகராக இருக்கிறார். அதே போல் அது இது எது என்ற நிகழ்ச்சியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயன், இன்று தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இதுபோல் பல கலைஞர்களையும் திறமையாளர்களையும் உருவாக்கி வரும் நிகழ்ச்சிகளில் முதன்மையாக உள்ளது விஜய் டிவி. அதேபோல ரியாலிட்டி ஷோக்கலில் டாப் ஹிட்தொடர்களாக இருக்கும் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் இரண்டிலும் கலந்து கொள்பவர்கள் வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணாச்சி கெட்டப்பில் வந்து சிவாவை மரணமாக கலாய்த்த அமுதவாணன்..! 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் இன்று புது புது படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றனர். அதேபோல் குக் வித் கோமாளியில் வந்த பலருக்கும் வெள்ளித் திரையில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் குறிப்பாக புகழ் பல படங்களில் காமெடியன் ஆக நடித்துள்ளார். அவர் ஜூ கீப்பர் என்னும் புது படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அப்படி பல கலைஞர்களை உருவாக்கிய விஜய் டிவிக்கு தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து KPY சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதன் பைனல் நிகழ்ச்சிக்காக நடுவராக சிவகார்த்திகேயன் நடுவராக வந்துள்ளார்.

தொடர்புடையவை  நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்.! காதலை அறிவித்த 'கண்ணே கலைமானே' சீரியல் நடிகை.!

அண்ணாச்சி கெட்டப்பில் வந்து சிவாவை மரணமாக கலாய்த்த அமுதவாணன்..! 3

விளம்பரம்

அதில் அவர் பேசும்போது என்னை அறிமுகப்படுத்திய விஜய் டிவிக்கு நன்றி எனவும், முகம் தெரியாமல் இருந்த என்னை இன்று உலகம் எங்கிலும் தெரியும்படி பெரிய நடிகர் ஆக்கியதற்கு விஜய் டிவிக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றும் கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமுதவாணன் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் போன்று கெட்டப்பில் வந்து சிவகார்த்திகேயனை மரணமாக கலாய்க்கிறார். சிவா நீங்கள் ஒன்று பயப்படாதீர்கள், நான் யாருக்கும் போட்டி கிடையாது என்று அவர் போலவே பேசி கலாய்க்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.. நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below video…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Viral Videos Update

விளம்பரம்

Leave a Comment