Categories: சமூகம்

டெல்லியில் குண்டு வீசி மக்களை கொன்று விடுங்கள்! உச்சநீதிமன்றம் ஆவேசம்!!

வெளியிட்டது
டெல்லியில் குண்டு வீசி மக்களை கொன்று விடுங்கள்! உச்சநீதிமன்றம் ஆவேசம்!! 1

டெல்லியில் அதிகரித்து இருக்கும் காற்று மாசு காரணமாக , மக்கள் பெரும் துயருக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, காற்று மாசை குறைப்பதில், டெல்லி அரசும், மத்திய அரசும் தோல்வியடைந்திருக்கிறது என்று விமர்சித்தது.

உலகம் நம்மைப் பார்த்து சிரிப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், மக்களின் ஆயுளை அரசாங்கம் குறைப்பதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், காற்று மாசுவின் காரணமாக மக்களை கொல்வதை விட்டு விட்டு , வெடிகுண்டுகளை வீசி அவர்களை கொன்று விடுவது மேல் எனவும் நீதிபதிகள் காட்டமாக குறிப்பிட்டுள்ளனர்.

கருத்து வேறுபாடுகளை தள்ளிவைத்துவிட்டு, ஒன்றாக அமர்ந்து, பேசி காற்று மாசுவை சுத்திகரிக்கும் திட்டங்களை, 10 நாட்களுக்குள் இறுதி செய்யுமாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்