‘எதிர்நீச்சல்’ சீரியலில் சில நாட்களாக காணாமல் போகி இருந்த கதாபாத்திரம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறதோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கு காரணம் அந்த சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கனிகா பகிர்ந்திருக்கும் புகைப்படமே. ‘எதிர்நீச்சல்’ சீரியல் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் ஆகும். ‘கோலங்கள்’ சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்கி வரும் இந்த தொடர் ஆரம்பத்திலிருந்து நல்ல ரீச்சைப் பெற்றுள்ளது.

ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டு வரும் நான்கு மருமகள்களின் கதையை மையமாகக் கொண்ட உருவாகப்பட்ட இந்த தொடரின் கதைக்களம் தற்போது எங்கெங்கோ சென்று விட்டது என்று தான் கூற வேண்டும். இந்த தொடரின் வில்லனாக குணசேகரன் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே வருவது பார்க்கும் ரசிகர்களுக்கு சிறிது சுணக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜனனி ஜெயிப்பது போல் காட்டுங்கள், கதையில் மாற்றம் வேண்டும் என தொடர்ந்து ரசிகர்கள் கமெண்ட்களில் புலம்பித் தீர்த்து வந்த வருகின்றனர். ஆனாலும் இயக்குனரின் காதுகளுக்கு இது எட்டவில்லை.
இந்த நிலையில் இந்த சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கனிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இத்தனை நாள் காணாமல் போயிருந்த அப்பத்தா கதாபாத்திரத்தில் நடித்து வந்த பாம்பே ஞானத்துடன் அவர் எடுத்துக்கொண்ட செல்பியை பகிர்ந்திருக்கிறார். கனிகாவும் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் இருப்பது போலவே இருப்பதால் மீண்டும் பாம்பே ஞானத்தின் என்ட்ரி இருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.