மெட்டி ஒலி கோபியை ஞாபகம் இருக்கா? ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன கோபி.!

இயக்குனர் திருமுருகன் ஆள் அடையாளமே மாறி இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 1999ம் ஆண்டு வெளியான அக்‌ஷயா என்கிற சீரியல் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானவர் திருமுருகன். பின்னர் இவர் 2002 முதல் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற குடும்ப்பாங்கான தொடரை எடுத்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார். இந்த தொடர் 2005ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. பின்னர் 2010ம் ஆண்டு ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற தொடர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த இரண்டு நாடகத்திலும் இவர் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதனால் மக்களுக்கு இவர் கோபியாகவே பார்த்து வருகின்றனர்.

மெட்டி ஒலி கோபியை ஞாபகம் இருக்கா? ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன கோபி.! 1

விளம்பரம்

சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார் திருமுருகன். பரத்தை வைத்து இவர் இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார். முதல் படம் எம்டன் மகன். இரண்டாவது படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு. இதில் எம்டன் மகன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்று வரை இந்த படத்தின் காமெடிகள் மக்களால் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது. முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. எனவே மீண்டும் சீரியல் பக்கம் தலைக்காட்டத் தொடங்கினார் திருமுருகன். கடைசியாக கல்யாண வீடு என்ற தொடரை இயக்கி இருந்தார். பின்னர் சில காலம் திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

தொடர்புடையவை  சக்தி திருமணத்தை நிறுத்த போராடும் ப்ரியா, காவியா.! பார்த்தி தந்தை எடுத்த விபரீத முடிவு

மெட்டி ஒலி கோபியை ஞாபகம் இருக்கா? ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன கோபி.! 3

விளம்பரம்

தற்போது இவரது நண்பர் போஸ் வெங்கட் விமலை வைத்து ஒரு புது படத்தை இயக்கி வருகிறார். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற கோபி அவர்களுடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தை பார்த்த பலரும் கோபி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மெட்டி ஒலி கோபியை ஞாபகம் இருக்கா? ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன கோபி.! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment