பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 58. இலங்கையை சேர்ந்தவர் போண்டா மணி. இவருடன் பிறந்தவர்கள் 16 பேர். இலங்கை கலவரத்தின் போது 8 பேர் இறந்துவிட பிழைப்புக்காக சென்னை தேடி வந்துள்ளார். பாண்டிபஜாரில் வாட்ச்மேன் வேலை பார்த்து வந்த இவர் 1991ம் ஆண்டு “பவுனு பவுனுதான்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் வடிவேலு விவேக் போன்ற முண்ணனி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். வின்னர், ஜில்லா, சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களில் நடித்தார். தற்போது இவருக்கு இதய கோளாறு ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீடியோ கீழே உள்ளது.

பொதுவாகவே துணை நடிகர்களின் வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காது. படங்கள் நடிக்கும் வாய்ப்பும் மிக குறைவாகத்தான் கிடைக்கும். அப்படியே கிடைத்தாலும் பெரிய நடிகர்கள் போல கோடிகளில் பணம் கிடைக்காது. மிக சொற்பமாகவே சம்பளம் கிடைக்கும். சிலர் பல படங்களில் நடித்து புகழ் பெற்று இருந்தாலும் பண வசதி இல்லாமல் கஷ்டப்பட்டு இறந்து போன கதைகளும் உண்டு. Youtube Video Code Embed Credits: Cineulagam
பரவை முனியம்மா, அல்வா வாசு, ரங்கம்மா பாட்டி போன்றவர்கள் பல படங்களில் காமெடி நடிகர்களாக நடித்திருந்த போதும் இறுதி காலத்தில் மருத்துவத்திற்கு வசதியில்லாமல் இறந்து போயினர். நடிகர் சங்கம் கூட இவர்களுக்கு உதவவில்லை. இனிமேலாவது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் இவர் போன்ற கஷ்டப்படும் நடிகர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு. வீடியோவை நீங்களும் காண..Watch the below video..