திருமண தேதியை அறிவித்த நவீன், கண்மணி..சின்னத்திரையில் செம்ம Cute Pair ரெடி | Navin Kanmani

சின்னத்திரையில் அடுத்த க்யூட்டனா ஜோடிகள் தயாராகி விட்டனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நவீன் மற்றும் கண்மணியின் திருமண தேதியை இருவரும் அறிவித்துள்ளனர். கலர்ஸ் தொலைக்காட்சியில் “இதயத்தை திருடாதே” என்ற சீரியலில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் நவீன். இவருக்கு ஜோடியாக பிந்து என்பவர் நடித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரியை பார்த்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் தங்கள் ஆவலை தெரிவித்து வந்தனர். ஏனெனில் ஏற்கனவே இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “திருமணம்” என்னும் தொடர் மூலம் அறிமுகம் ஆனவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா, இவர்களையும் ரசிகர்கள் இவ்வாறு உசுப்பேற்றிவிடவே தற்போது இவர்கள் இருவரும் நிஜ தம்பதிகள் ஆகிவிட்டனர். வீடியோ கீழே உள்ளது 

திருமண தேதியை அறிவித்த நவீன், கண்மணி..சின்னத்திரையில் செம்ம Cute Pair ரெடி | Navin Kanmani 1

விளம்பரம்

ஆனால் நவீன்-பிந்து விஷயத்தில் அவ்வாறு நடக்கவில்லை. ஏனெனில் நவீனுக்கும், சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக வரும் கண்மணி சேகருக்கும் தான் திருமணம் முடிவாகியுள்ளது. அதை நவீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இருவரும் மீடியா துறையை சேர்ந்தவர்கள் என்பதாலும், கண்மணியும், நவீனும் நல்ல நண்பர்கள் என்பதாலும் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற உள்ளது. இந்த மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ஜூன் மாதம் திருமணம் நடைபெறும் என்றும் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். Youtube Video Code Embed Credits: Galatta

திருமண தேதியை அறிவித்த நவீன், கண்மணி..சின்னத்திரையில் செம்ம Cute Pair ரெடி | Navin Kanmani 3

விளம்பரம்

தற்போது இருவரும் தங்களது திருமண அழைப்பிதழை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். அதில் ஜூன் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வரவேற்பு மற்றும் திருமணம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். சின்னத்திரையில் அடுத்த க்யூட்டான ஜோடிகள் திருமணத்திற்கு ரெடியாகிவிட்டனர் என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அந்த காணொலியை நீங்களும் காண..Watch the below Video..

தொடர்புடையவை  மீண்டும் வந்த லட்சுமி அம்மா..! அம்மாவிடம் மனதில் இருக்கும் கஷ்டத்தை சொல்லி அழும் மூர்த்தி..

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment