உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு!!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு!! 1

உச்ச நீதிமன்றத்தின், 47வது தலைமை நீதிபதியாக, நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே, இன்று (நவ.18) பதவியேற்றுக் கொண்டார். இவர் 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான 17 மாதங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த ரஞ்சன் கோகோய் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, மஹாராஷ்டிராவை சேர்ந்த பாப்டே, 63, இன்று பதவியேற்றுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், வழக்கறிஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர், நீதிபதி பாப்டே. இவருடைய தந்தை, அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பாப்டே, சிறந்த மூத்த வழக்கறிஞர்.நாக்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன் பணியை செய்து எஸ்.ஏ.பாப்டே, உச்ச நீதிமன்றத்தில், 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி னார், 2013ல், உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம், தனிமனித சுதந்திரம் உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும், 2021 ஏப்., 23 வரை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு , 21 நாளில் துாக்கு தண்டனை! புதிய சட்டத்தை இயற்றி ஆந்திர அரசு அதிரடி !!

இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் பாப்டே பதவியேற்றார். இவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

Leave a Comment