செய்திகள்,சமூகவலைத்தளங்கள், செய்தித்தாள்கள், ரேடியோ என அனைத்திலும் முழுவதுமாக இப்பொது ஆக்கிரமித்துள்ள விஷயம் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமண செய்தி தான். 7 ஆண்டுகள் காதலித்து இன்று திருமண செய்துகொண்ட இருவரும், இந்த நிகழ்வை மஹாபலிபுரத்திலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஏற்பாடு செய்துள்ளனர்.\
அண்மைக்காலமாக பிரபலங்களின் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல நிறுவனங்களும் காசு கொடுத்து வரும் நிலையில், இப்பொது நயன்-விக்கி திருமணத்தை நெட்பிளிக்ஸ் தளத்திற்கு திருமண நிகழ்ச்சியை வியாபாரம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், திருமண நிகழ்ச்சியை யாரும் வீடியோ எடுக்கக் கூடாது என்றும் புகைப்படங்களுக்கும் அனுமதி கடுமையாக மறுக்கப்பட்டு இருக்கிறது. எந்தவொரு போட்டோவும் கடுமையான பாதுகாப்பு காரணமாக இதுவரை கசியவில்லை.
இதனால் திருமணத்திற்கு சொகுசு காரில் வரும் பிரபலங்களை வரும் வழியிலேயே தடுத்து நிறுத்தி அவர்களது செல்போன்களை வாங்கிக் கொள்ளும் பவுன்சர்களின் காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை நடந்த எந்தவொரு பிரம்மாண்டமான திருமணத்திலும் இதுபோன்ற நடைமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் ஸ்டைலில் இதுபோன்ற செக்யூரிட்டியை போட்டுள்ளனர்.
அந்த ஒரு வகையிலும் போட்டோக்கள் வெளியாக கூடாது என்பதை உறுதிப்படுத்த திருமண விழா நடக்கும் இடத்தை சுற்றி 80 பவுன்சர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ரசிகர்கள் மற்றும் மீடியா ஆட்கள் யாரும் உள்ளே நுழைந்து விடக் கூடாது என்பதில் கடுமையான தீவிரம் காட்டி உள்ளதாகவும் சில லேடி பவுன்சர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த விருந்தினர்களிடம் கடுமையான சோதனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறாக செய்வது அவர்களுக்கு சாதகமாக இருந்தாலும் இதுவரை எந்தவொரு திருமணத்துக்கு சென்றாலும் இப்படியொரு கட்டுப்பாடு இல்லாத நிலையில் தங்களின் பர்சனல் செல்போன்களையே இப்படி வழிமறித்து தடுத்து நிறுத்தி வாங்கி விடுகிறார்களே என்றும் போன கொடுத்தால் தான் உள்ளே அனுமதி என்றும், பார்கோடு வேலை செய்யவில்லை என்றால் அனுமதி கிடையாது என்றும் கறார் காட்டி வரும் நிலையில், பிரபலங்கள் சிலருக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டதாக கூறுகின்றனர்.
திருமணத்திற்கு வருபவர்களை பணிவாகவும் அன்பாகவும் பிரபலங்களிடம் ஒழுங்கான முறையில் சோதனை நடத்தாமல் பல பவுன்சர்கள் மற்றும் சோதனையில் ஈடுபடுவர்கள் நடந்து கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பி உள்ளன. பிரபலங்களிடம் இருந்து செல்போன்களை எப்படி செக்யூரிட்டி செக் செய்பவர்கள் வாங்குகின்றனர் என்பது குறித்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு தெரிந்து நடைபெறுகிறதா? இல்லையா? என்பது தான் இதில் புதிரான விஷயம்.