Categories: சினிமா

“சுஷாந்த் புகைப்படத்துடன் டி-ஷர்ட்….ட்ரெண்டாகும் #BoycottFlipkart”

வெளியிட்டது

தமிழ் திரையுலக ரசிகர் அவ்வளவு எளிதில் மறந்திட முடியாத ஒரு ஹிந்தி நாயகனாக இருப்பவர் நடிகர் சுஷாந்த் சிங்க் ராஜ்புட். பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங்க் தோனியின் பியோபிக் படத்தில் நடந்து தமிழகமெங்கும் நல்ல ரசிகர் பட்டாளம் கொண்டுள்ளார் இவர். தோனியாக மட்டுமே நமக்கு தெரிந்த இவர், பாலிவுட்டிலும் மிக பெரிய அழியாத வடுவை உருவாக்கி சென்றுள்ளார்.

"சுஷாந்த் புகைப்படத்துடன் டி-ஷர்ட்....ட்ரெண்டாகும் #BoycottFlipkart" 1

அனைத்து திரையுலகிலும் வாரிசுகளின் கை கொஞ்சம் ஓங்கியே இருக்கும், அது சகஜமே. இன்று தமிழக மக்களின் மனங்களை மிகவும் கவர்ந்த நடிகர்களாக இருக்கும் விஜய், தனுஷ், சிம்பு போன்றோர் வாரிசு நடிகர்களே. ஆனால் இங்கு இருக்கும் ஒரு ஆரோக்கியமான விஷயம் ஹிந்தியில் இல்லாமல் போயுள்ளளதாக பாலிவுட் ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விஜய், சிம்பு, தனுஷ் போலவே தமிழகத்தில் அஜித், விஜய் சேதுபதி, சிவா கார்த்திகேயன் போன்றோர் மிக பெரிய நடிகர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் அது பாலிவுட்டில் கொஞ்சம் மாறுப்படுகிறது. அதாவது அங்கு குறிப்பிட்ட நபர்களின் உதவியுடன் படங்களில் நடிக்க முடியும் என்ற நிலைமை நீடிக்கிறது. தனியாக எந்த பின்புலமும் இல்லாமல் படம் நடித்தாலும், அந்த படங்களை பாலிவுட் மீடியாக்கள் முழுவதுமாக ஒதுக்கி விடுகிறார்கள். அதனை “Bollywood Mafia” எனவும் அதை குறித்து முக்கிய நடிகையான கங்கனா ரணாவத் கூட பொதுவெளியில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

அந்த பிரச்சனைகளை கடந்து சீரியலில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் சுஷாந்த், 2013ஆம் ஆண்டு வெளியான “கை போ சே” படம் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே நல்ல வெற்றியை கொடுத்ததால் அடுத்தடுத்து, “ஸுத் தேசி ரொமான்ஸ், எம்.எஸ். தோனி, கேதார்நாத், Detective Byomkesh Bakshy, சிசோரே” போன்ற வெற்றி படங்களில் நடித்துளளார். குறிகிய காலத்திலேயே இந்தியாவெங்கும் ரசிகர் கூட்டம் கொண்ட இவர், திடிரென 2020ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு காரணமாக பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டாலும், மறைமுகமாக சில நேரங்களில் சுஷாந்த் தான் அனுபவித்து வரும் கஷ்டங்களை சில மேடைகளில் கூறியுள்ளார் என்பதை ரசிகர்கள் பின்னர் கண்டுபிடித்து தெரிவித்து உள்ளார்கள். பாலிவுட் மாபியா என அழைக்கப்படுவதில் முக்கிய நபராக கருதப்படும் இயக்குனர் கரண் ஜோகரின் நிகழ்ச்சி ஒன்றில் வாரிசு நடிகை அலியா பட் “யார் சுஷாந்த்” என கேட்டது, மற்றொரு பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் அதே நிகழ்ச்சியில் தன் வளர்ப்பு மகளுக்கு மறைமுகமாக “கேதார்நாத்” படத்தில் உடன் நடித்த சுஷாந்த்தை ஒதுக்க கூறியது என பல விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்தன.

இவர் உலகில் இருந்து மறைந்தாலும், இப்பொது இவரின் பெயர் பாலிவுட்டில் மிக பெரிய அளவில் இருந்து கொண்டே இருக்கிறது. நன்றாக பேசினாலும், தவறாக பேசினாலும் இவரின் நியூஸ் முன்னணியில் இருந்து கொண்டே இருக்கிறது. அவரின் மரண பற்றிய விஷயங்கள் இன்றும் தெளிவாக வராத நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் இப்பொது தவறாக ஒரு காரியம் செய்து நிறையவே கலாய்க்கப்பட்டு வருகிறது.

சுஷாந்தின் புகைப்படங்கள் பொருத்தி அதில்  “Depression is like drowning” அவர் மன அழுத்தத்தால் இறந்தார் என்பதை உறுதிப்படுத்துவதாக அந்த டி-ஷர்ட்டிலுள்ள வார்த்தைகள் உள்ளன எனப் பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், சுஷாந்தை மன அழுத்தத்தை வைத்து அடையாளப்படுத்துவது தவறு என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #BoycottFlipkart என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டு செய்து வருவதால் தனது ரேட்டிங்கை இழந்திருக்கிறது பிளிப்கார்ட்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்