10 நாள் இமயமலை பயணத்தில் சென்ற ரஜினிகாந்த்! பாபாஜி குகையில் தியானம்!!

10 நாள் இமயமலை பயணத்தில் சென்ற ரஜினிகாந்த்! பாபாஜி குகையில் தியானம்!! 1

10 நாள் பயணத்தில் இமயமலை சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள பாபாஜி குகையில் தியானம் செய்வதோடு, பல்வேறு கோயில்களில் வழிபாடு நடத்தி வருகிறார். பிரிக்க முடியாதது ரஜினியும், இமயமலை பயணமும் என கூறலாம். இமயமலை பயணம் பற்றி தன் படங்களிலும் ரஜினி பேசியிருக்கிறார்.

தர்பார் படத்தின் பணிகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இமயமலைக்கு பயணம் சென்று இருக்கிறார். கடந்த சில வருடங்களாக படப்பிடிப்புகளில் கடும் பிஸியாக இருந்த அவர், தற்போது இமயமலைக்கு 10 நாட்கள் ஆன்மீக பயணம் சென்றுள்ளார். முதல் நாள் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் தயானந்த ஆசிரமத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார். அங்குள்ள தயானந்த சுவாமியின் சமாதியில் தியானம் செய்த ரஜினிகாந்த், கங்கா ஆரத்தியையும் பார்த்தார். இரவு அங்கேயே தங்கிய அவர், ஆசிரமத்தில் கொடுத்த உணவுகளையே சாப்பிட்டார்கள்.

விளம்பரம்

அதன்பிறகு கேதார்நாத் புறப்பட்ட அவர் அங்குள்ள சிவன் கோயிலில் சாமி கும்பிட்டார். மேலும் அருகில் உள்ள சில குகை கோவில்களிலும் சென்று வழிபாடு நடத்திய அவர், அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்வதோடு, தன்னை சந்திக்கும் ரசிகர்களுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

தொடர்புடையவை  AR ரஹ்மான் மகன் AR அமீன் குரலில் அருமையான ஒரு மெலடி.! பத்து தல படத்தின் 2nd சிங்கிள் வெளியானது.!

பாபாஜி குகையில் தியானம் மேற்கொண்டு வரும் ரஜினிகாந்த் கம்பளிப் போர்வை, குல்லாவுடன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். மேலும் அவர் இமயமலைப் பகுதியில் வழிபாடு நடத்தும் படங்களும் வெளியாகியுள்ளன. உள்ளூர் மக்களோடு ஆர்வமாக உரையாடிக் கொண்டும் பக்தர்களில் ஒருவராக நடந்து செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. மரங்கள் அடர்ந்துள்ள மலைப்பாதையில் நடிகர் ரஜினிகாந்த் நடந்து செல்லும் காட்சிகளும் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment