நடிகர் பார்த்திபனின் “இரவின் நிழல்” படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பார்த்திபன், ரோபோ ஷங்கர், வரலக்ஷ்மி சரத்குமார், பிரிக்கடா என பலர் நடித்துள்ளனர். “non-linear single shot” படமாக வெளியாகியுள்ள இந்த படம் விமர்சனரீதியாகவும் விமர்சகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. பார்த்திபனின் திரைக்கதை இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது.

இந்த படத்தை நடிகர் பார்த்திபனும், நடிகை பிரிக்கடாவும் திரையரங்கில் சென்று ரசிகர்களை பார்த்து அவர்களின் வரவேற்பை நேரில் பார்த்து ரசித்துள்ளனர். இந்த படத்தில் நாயகியாக நடித்து திரையில் அறிமுகமாகியுள்ளார் பிரிக்கடா. யூடியூப் வெப்சீரிஸ் “ஆஹா கல்யாணத்தில்” நடித்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர், இப்பொது திரைத்துறையில் அறிமுகமாகியுளளார்.
குறும்படங்கள், மாடலிங் என பிரபலமாக இருந்த இவரை கண்டெடுத்து பார்த்திபன் திரைத்துறையில் நாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கு முன் இவர் நடிகர் விஷாலின் “அயோக்கியா” மற்றும் விஜயின் “மாஸ்டர்” படத்தில் சிறிய பாத்திரங்களில் ஏற்கனவே நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் பல்வேறு விஷயங்கள் பாராட்டபட்டாலும், பேசப்பட்டாலும் நிறைய பேர் பேசிய குறிப்பான ஒரே விஷயம் நடிகை ப்ரிகிடா நிர்வாணமாக நடித்துள்ளார் என்பதே. இதுவே மிக பெரிய பேசும் பொருளாக உருவெடுத்தது. தற்போது இந்த கூற்றுகளை தாங்க முடியாமல் நடிகை ப்ரிகிடா தன்னுடைய இந்தப்பக்கத்தில் இதனை குறித்து மனம்திறந்துள்ளார்.
“நீங்கள் நினைப்பது போல அது அவ்வாறு படமாக்கபட்டது கிடையாது. உண்மையிவ் அந்த காட்சியில் நான் உடை அணிந்திருந்தேன், Please don’t spread it” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாக பலரும் அவருக்கு தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.