நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ரகுதாத்தா’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஹிந்திக்கு எதிராக போராடும் ஒரு பெண்ணாக, தைரியமான முன்னெடுப்பை கீர்த்தி சுரேஷ் முன்னெடுத்திருக்கிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவர் கடைசியாக நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷை முதன்மை நாயகியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ‘ரகு தாத்தா’. ‘ஃபேமிலி மேன்’ என்னும் விருது பெற்ற படைப்பிற்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து எம்.எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ஆனந்த் சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஒய் யாமினி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஷான் ரால்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் டீசரை பார்க்கும் பொழுது முதலில் ஆர்மி பரைய்டு ஒன்றில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், ஹிந்தியில் சொல்லப்படும் வார்த்தைகளுக்கு எதிராக தமிழில் கூறுமாறு கேட்கிறார். அதன் பின்னர் தொடர்ந்து ஹிந்திக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகிறார். போர்டில் எழுதப்பட்டிருக்கும் ஹிந்தி வார்த்தைகளையும் அவர் அழிப்பது, ஹிந்திக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவது என கீர்த்தி சுரேஷ் அதிரடி காட்டுகிறார்.

தொடர்ந்து, “இன்னும் இந்த ஊருக்கு மின்சாரமே வரவில்லை சபா எதற்கு?” என்பது போன்ற கேள்விகளும், “திணிக்காதே திணிக்காதே ஹிந்தியை திணிக்காதே” போன்ற வசனங்களும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பல நாட்களுக்கு முன்பு நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த டீசரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Hombale Films