Categories: சினிமா

மூணு வேளையும் சாப்டனும் தூங்கணும்..! Jayamravi-ன் Brother படத்தின் டீசர் வெளியாகியது..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. தனி ஒருவன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்தார் ஜெயம் ரவி. தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு நடித்து வந்தாலும் சில தோல்வி படங்கள் இவருக்கு தவிர்க்க முடியாமல் அமைந்து வருகிறது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான இறைவன், சைரன் போன்ற படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுக்கவில்லை. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு வெற்றிக்காக நடிகர் ஜெயம் ரவி போராடி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மூணு வேளையும் சாப்டனும் தூங்கணும்..! Jayamravi-ன் Brother படத்தின் டீசர் வெளியாகியது..! 1

இவர் தற்போது இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்துள்ளார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் சற்று அதிகமாகி இருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் இப்படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொடர் தோல்விகளுக்கு பிறகு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உருவாகி இருக்கிறது.

Embed Video Credits : THINK MUSIC INDIA

வெளியிட்டது

புதிய செய்திகள்