Categories: அரசியல்

இடைத்தேர்தல் நிலவரம்: அதிமுக வெற்றி

நாடு முழுவதும் காலியாக உள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் சட்ட மன்ற தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது.

இன்று (அக்.24) இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழ் நாட்டில் அதிமுக அபார வெற்றி பெற்றுள்ளது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் முத்தமிழ்செல்வன் மற்றும் நாராயணன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை விட சுமார் 26,980 வாக்குகள் அதிகம் பெற்று முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றார்.

இடைத்தேர்தல் நிலவரம்: அதிமுக வெற்றி 1

அதேபோல், நாங்குநேரி தொகுதியில், அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனை விட 28,079 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வெற்றி பெற்றுள்ளார்.

புதுச்சேரி மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7.171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் காமராஜ் நகர் தொகுதியை மீண்டும் தக்க வைத்துள்ளதிருக்கிறது காங்கிரஸ்.

இத்தேர்தல் முடிவின்படி, சட்டமன்றத்தில் அதிமுகவின் எண்ணிக்கை 124ஆக உயர்ந்துள்ளது. மற்றபடி திமுக 100, காங்கிரஸ் 7, இந்திய யூனியன் லீக் 1, அமமுக 1, சபாநாயகர் 1 ஆகிய இடங்கள் நிரம்பியுள்ளது.

இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது, இந்த இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி, உண்மைக்கு கிடைத்த வெற்றி. இந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுகவின் பொய் பிரசாரங்களை தெரிந்துக் கொண்ட மக்கள் தோல்வியை பரிசாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்