கவின், இப்படி ஒரு நல்ல விஷயத்தை போய் மறைச்சுட்டாரே!!

கவின், இப்படி ஒரு நல்ல விஷயத்தை போய் மறைச்சுட்டாரே!! 1

பிக் பாஸ் 3 பங்கேற்றவர்களில் கவினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். கவின் ஆர்மியை சேர்ந்தவர்கள் இப்பொழுது கூட ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளனர். சினிமாவில் ஏதாவது வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து தான் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். தர்ஷனை தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சாண்டி மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்ட போது அதை பார்த்தவர்கள் கவின் எங்கே, ஆளையே காணவில்லையே என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சாண்டி யாரும் எதிர்பார்க்காத பதிலை கொடுத்தார்.

அதாவது, கவின் படப்பிடிப்பிற்காக கலந்து கொள்ளவதற்கு வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக சாண்டி தெரிவித்தார். இதை கேட்ட ஆதரவாளர்கள், கவின் ஏன் இந்த ஒரு நல்ல விஷயத்தை எங்களிடம் கூறவில்லை. சொல்லியிருந்தால் இந்நேரம் கொண்டாடியிருப்போமே என்றனர்.

விளம்பரம்

இதற்கிடையில், தீபாவளியை முன்னிட்டு ஒளிபரப்பாக இருக்கிறது பிக் பாஸ் கொண்டாட்டம் இந்த நிகழ்ச்சியில் கவின், லோஸ்லியா ஆகியோர் சேர்ந்து விஜய் பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் அஜித் கெட்டப்பிலும் வர போகிறாரம் கவின். கவினும், லோஸ்லியாவும் தங்களின் காதலை தொடர்வதாக அவர்களின் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். இதற்கிடையே அவர்களின் காதல் போலி என்றும், அது பிக் பாஸ் கொடுத்த ஸ்க்ரிப்ட் என்றும் லோஸ்லியாவின் இலங்கை நண்பர்கள் சிலர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையவை  நயன்தாராவின் குழந்தைகளை பார்க்க ஓடோடி வந்த ஷாருக்கான்.! முத்தமிட்டு வழியனுப்பிய நயன்.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment