Categories: சினிமா

மழை, வெயிலில் மிகவும் கஷ்டப்பட்டு படத்தை எடுத்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படக்குழு.! மேக்கிங் வீடியோ இதோ.!

வெளியிட்டது

நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். பல சண்டை காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு தனுஷ் நடித்திருக்கும் வீடியோவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் தான் :கேப்டன் மில்லர்’. இந்த திரைப்படம் வெள்ளைக்காரர்களுக்கும், மலை கிராமத்தில் வசிக்கும் ஒரு கிராமத்துனருக்கும் இடையிலான சண்டைக் காட்சிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் பல நாட்களாக இயக்கி வரும் இந்த திரைப்படம் தற்போது ஷூட்டிங் நிறைவடைந்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மழை, வெயிலில் மிகவும் கஷ்டப்பட்டு படத்தை எடுத்துள்ள 'கேப்டன் மில்லர்' படக்குழு.! மேக்கிங் வீடியோ இதோ.! 1
நடிகர் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக டி.ஜி தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அருண் தியாகராஜன் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். ஜி சரவணன் மற்றும் சாய் சித்தார்த் ஆகிய இருவரும் இணை தயாரிப்பாளர்களாக இருக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்காக செட்டுகள் அமைப்பது, சண்டை காட்சிகள் எடுப்பது அனைத்தையும் வீடியோவாக படக்குழுவினர் தற்போது வெளியிட்டு இருக்கின்றனர்.


நல்ல வரவேற்பை பெற்று வரும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்