“அதாம்ல கேப்டனு”!! உடல்நல குறித்து கேட்ட ஒருவரையும் மறவாமல் இருந்து நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் விஜயகாந்த்!!

வெளியிட்டது

"அதாம்ல கேப்டனு"!! உடல்நல குறித்து கேட்ட ஒருவரையும் மறவாமல் இருந்து நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் விஜயகாந்த்!! 1

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்கள் ரஜினியும், கமல்ஹாசனும் மிக பெரிய பாய்ச்சலில் இருந்த போது, B & C சென்டர்களில் இருவருக்கும் மிக பெரிய தலைவலியாக இருந்த நடிகர் விஜயகாந்த். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மதுரையில் சுற்றி திரிந்த இந்த விஜயராஜ் சென்னையை நோக்கி சினிமா மேல் கொண்ட ஆசையால் வந்து சில காலம் சரியான வாய்ப்புகள் இன்றி அலைந்த பொது அவர் நடித்த முதல் படம் “இனிக்கும் இளமை”. 1979ஆம் ஆண்டு வெளியான இந்த படம் பெரிய வெற்றியை விஜகாந்திற்கு தேடி தரவில்லை.

சரியான வெற்றிகாக அலைந்த போது தான் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் “சட்டம் ஒரு இருட்டறை” படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவர்க்கு கிடைத்தது. 1981ஆம் வெளியான இந்த படம் தமிழகம் எங்கும் மிக பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக கிராமப்புறங்களில் படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மெல்ல கம்ர்சியல் படங்களில் நடிக்க துவங்கிய விஜய்காந்த் 100வது நாள், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்கிலே, நானே ராஜா நானே மந்திரி, செந்தூர பூவே, பொன்மன செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன் என தொடர் வெற்றி படங்கள். 1984ஆம் ஆண்டு இவர் நடிப்பில் மொத்தம் 18 படங்கள் வெளியாகின. ஒரு நடிகருக்கு ஒரு ஆண்டில் அதிகப்படியான வெளியான எண்ணிக்கை இது தான்.

கொஞ்சம் சறுக்கல்களுக்கு பின் மீண்டும் புலன் விசாரணை, சின்ன கவுண்டர், காவியத்தலைவன், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், எங்க முதலாளி, ஏழை ஜாதி, செந்தூர பாண்டி, வானத்தை போல, வாஞ்சிநாதன், நரசிம்மா, தவசி, தேவன், ரமணா என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொண்டார்.

2005ஆம் ஆண்டு மதுரையில் தனிக்கட்சி ஒன்றை துவங்கி அதற்கு “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என பெயர் சூட்டினார். மக்கள் மத்தியியிலுள்ள தன்னுடைய செல்வாக்கின் மூலம் 2006ஆம் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் நின்று வெற்றியும் கண்டார். அவருடைய கட்சி சார்பில் போட்டியிட அனைவரும் தோல்வி அடைந்தாலும் வாக்கு சதவீதத்தில் 10.1% வாக்குகளை பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 2011ஆம் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு அதில் 29இல் வெற்றி பெற்று அப்போதைய சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரானார். அதுவே அந்த கட்சியின் அதிகபட்ச வெற்றியாய்கும். அதற்கு பிறகு இப்பொது வரை அரசியலில் அவருடைய கட்சியால் பெரிய மாற்றத்தையோ, வெற்றியையோ பெற முடியவில்லை.

உடல்நல குறைவு ஏற்பட்டு தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் விஜயகாந்தும் போராடி வருகிறார். அவர் சார்பில் அவருடைய மனைவி பிரேமலதா கட்சியை வழிநடத்தி வருகிறார். அவ்வப்போது அமெரிக்கா சென்று மருத்துவம் பார்த்துக்கொண்டு வருகிறார் நடிகர் விஜயகாந்த்.

கடந்த சில ன்ட்கள் முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேப்டனுக்கு அறுவை சிகிச்சை மூலம், காலில் இருந்த விரல்கள் நீக்கப்பட்டதாக கட்சியின் சார்பில் அதிகாரபூர்வ அறிக்கை வெளியானது. இந்நிலையில் சினிமா துறை பிரபலங்களும், நட்சத்திரங்களும், அரசியல்வாதிகளும் நடிகர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அறிக்கைகளும், விடீயோக்களும் வெளியிட்டனர்.

இப்பொது வீடு திரும்பியுள்ள கேப்டன், இந்த அறிக்கைகளுக்கு பதில் அளிக்கும் பொருட்டு, தனக்கு வாழ்த்து கூறிய அனைவரது பெயரையும் குறிப்பிட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சியின் சார்பில் வெளியாகியுள்ள இந்த அறிக்கையில் தன் உடல்நலம் குறித்து பேசியிருந்த அனைவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்து விரைவில் பூரணகுணமடைந்து திரும்புவதாகவும் கூறி வெளியிட்டுள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்