“மீண்டும் பழைய கேப்டனாக கர்ஜியுங்கள் நண்பா”!! கேப்டன் குறித்து நெகிழ்ந்துள்ள பிரபலங்கள்!!

வெளியிட்டது

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்கள் ரஜினியும், கமல்ஹாசனும் மிக பெரிய பாய்ச்சலில் இருந்த போது, B & C சென்டர்களில் இருவருக்கும் மிக பெரிய தலைவலியாக இருந்த நடிகர் விஜயகாந்த். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மதுரையில் சுற்றி திரிந்த இந்த விஜயராஜ் சென்னையை நோக்கி சினிமா மேல் கொண்ட ஆசையால் வந்து சில காலம் சரியான வாய்ப்புகள் இன்றி அலைந்த பொது அவர் நடித்த முதல் படம் “இனிக்கும் இளமை”. 1979ஆம் ஆண்டு வெளியான இந்த படம் பெரிய வெற்றியை விஜகாந்திற்கு தேடி தரவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"மீண்டும் பழைய கேப்டனாக கர்ஜியுங்கள் நண்பா"!! கேப்டன் குறித்து நெகிழ்ந்துள்ள பிரபலங்கள்!! 1

சரியான வெற்றிகாக அலைந்த போது தான் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் “சட்டம் ஒரு இருட்டறை” படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவர்க்கு கிடைத்தது. 1981ஆம் வெளியான இந்த படம் தமிழகம் எங்கும் மிக பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக கிராமப்புறங்களில் படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மெல்ல கம்ர்சியல் படங்களில் நடிக்க துவங்கிய விஜய்காந்த் 100வது நாள், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்கிலே, நானே ராஜா நானே மந்திரி, செந்தூர பூவே, பொன்மன செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன் என தொடர் வெற்றி படங்கள். 1984ஆம் ஆண்டு இவர் நடிப்பில் மொத்தம் 18 படங்கள் வெளியாகின. ஒரு நடிகருக்கு ஒரு ஆண்டில் அதிகப்படியான வெளியான எண்ணிக்கை இது தான்.

கொஞ்சம் சறுக்கல்களுக்கு பின் மீண்டும் புலன் விசாரணை, சின்ன கவுண்டர், காவியத்தலைவன், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், எங்க முதலாளி, ஏழை ஜாதி, செந்தூர பாண்டி, வானத்தை போல, வாஞ்சிநாதன், நரசிம்மா, தவசி, தேவன், ரமணா என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொண்டார்.

2005ஆம் ஆண்டு மதுரையில் தனிக்கட்சி ஒன்றை துவங்கி அதற்கு “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என பெயர் சூட்டினார். மக்கள் மத்தியியிலுள்ள தன்னுடைய செல்வாக்கின் மூலம் 2006ஆம் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் நின்று வெற்றியும் கண்டார். அவருடைய கட்சி சார்பில் போட்டியிட அனைவரும் தோல்வி அடைந்தாலும் வாக்கு சதவீதத்தில் 10.1% வாக்குகளை பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 2011ஆம் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு அதில் 29இல் வெற்றி பெற்று அப்போதைய சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரானார். அதுவே அந்த கட்சியின் அதிகபட்ச வெற்றியாய்கும். அதற்கு பிறகு இப்பொது வரை அரசியலில் அவருடைய கட்சியால் பெரிய மாற்றத்தையோ, வெற்றியையோ பெற முடியவில்லை.

உடல்நல குறைவு ஏற்பட்டு தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் விஜயகாந்தும் போராடி வருகிறார். அவர் சார்பில் அவருடைய மனைவி பிரேமலதா கட்சியை வழிநடத்தி வருகிறார். அவ்வப்போது அமெரிக்கா சென்று மருத்துவம் பார்த்துக்கொண்டு வரும் நடிகர் விஜயகாந்த் இப்பொது மீண்டு திடீரென சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலை மீண்டும் சரியில்லாத காரணத்தால் அவர் அனுமதிக்கப்பட்டார் என கூறப்பட்ட நிலையில், அது குறித்து அதிகாரப்பூரவ தகவலை    சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வழக்கமான பரிசோதனை காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்பவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்களை அகற்றியுள்ளார்களாம். தற்போது சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. செய்தி இப்பொது தீயாக பரவி வருகிறது.

சர்ச்சைகளாக இருந்தாலுமே, மிக பெரிய வகையில் இது மக்களிடம் பேசப்பட்டு வருகிறது. இப்போது இந்த சர்ச்சைகளுக்கு தே.மு.தி.க கட்சி சார்பில் அறிக்கை வெளியிட பட்டுள்ளது. அதில், நீண்ட நாட்களாக கேப்டனுக்கு நீரழிவு நோய் இருக்கிறது. ஆகையால் மருத்துவர்களின் ஆலோசனை படி அவருடைய வலது காலில் இருக்கும் விரல்கள் நேற்று அகற்றப்பட்டுள்ளது, விரைவில் கேப்டன் உடல்நலம் சீராகி வீடு திரும்புவார் எனவும் அந்த அறிக்கையில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பொது மருத்துவமனையில் இருக்கும் நடிகர் விஜயகாந்தி விரைவில் உடல்நலம் தேறி வீட்டிற்கு வர வேண்டும் என நடிகர் பலரும் தங்களுடைய செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். உச்ச நட்சத்திரம் ரஜினி விஜயகாந்துடன் இதுவரை இணைந்து நடித்ததில்லை. இருப்பினும் இருவரும் நல்ல நண்பர்களாவே இருந்து வருகிறார்கள். குறிப்பாக விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த பொது அவருக்கு மிகவும் உதவியாக இருந்தவர் நடிகர் ரஜினி. அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “என் அருமை நண்பன் விஜயகாந்த் விரைவில் பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல், “அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன், விரைவில் பூரண குணமடைந்து அவர் வீடு திரும்ப விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார். நடிகர் கமலும், விஜயகாந்தும் ஒரே ஒரு படத்தில் இணைந்துள்ளார். 1986ஆம் ஆண்டு வெளியான “மனக்கணக்கு” என்ற படத்தில் இருவரும் இணைந்தே நடித்துள்ளனர்.

சத்யராஜ் நடிகர் விஜயகாந்துடன் தான் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். 1986ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த், நளினி, மோகன் என பலர் நடிக்க இந்த படத்தில் வில்லனாக நடித்து மிகவும் மக்களை மிரட்டினார் சத்யராஜ். இன்றளவும் மிக நெருங்கிய நட்பில் இருக்கும் விஜயகாந்தும் சத்தியராஜூம் அவ்வப்போது சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம். இப்பொது சத்யராஜ் விஜயகாந்த் உடல் நிலை சரியாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, “என்னுடைய அருமை நண்பன் விஜி” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Video Courtesy – TopTamilNews

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்