“இந்த பொங்கல் நமக்கு செம்ம கலெக்ஷன்”!! Second look’இல் காய் கறி வண்டியில் குழந்தைகளுடன் ஜாலியாக இருக்கும் விஜய்!!

தமிழ் சினிமாவின் இப்போதைய உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். கலவையான விமர்சனம் பெற்றாலும் இவருடைய படங்கள் எளிதாக 200 கோடி வசூலை தாண்டிவிடுகிறது. பல நல்ல விமர்சங்களை பெற்றாலும் முன்னணி நாயகர்கள் சிலரால் கூட இந்த வசூலை எட்ட முடியாத நிலை உள்ளது. இதற்கு சான்று அண்மையில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயுடன், பூஜா ஹெக்டே, செல்வராகவன்,வி.டி.வி கணேஷ் என பலர் நடித்த இந்த படம் மிகவும் கலவையான விமர்சங்களையே பெற்றது. இருப்பினும் இந்த ஆண்டின் இப்போதைய அதிக வசூல் செய்த தமிழ் படமாக 230 கோடிக்கு மேல் அசால்ட்டாக வசூல் செய்துளளது இந்த படம்.

விஜய் கேரளாவிலும் பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். அதே போல இப்போது தெலுங்கிலும் தன்னுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்த அவர் தன்னுடைய அடுத்த படமான “T66” படத்தில் பணியாற்றும் பலரையும் தெலுங்கில் அதிகம் அறியப்பட்டவர்களாக, ஆதிக்கம் செலுத்துபவர்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் ஆஸ்தான இயக்குனரான வம்ஷி படிப்பள்ளியுடன் கை கோர்த்துள்ளார் விஜய்.

விளம்பரம்
தொடர்புடையவை  கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா..! மயங்கி விழுந்த மகன் சண்முகபாண்டியன் தற்போதைய நிலை என்ன?

"இந்த பொங்கல் நமக்கு செம்ம கலெக்ஷன்"!! Second look'இல் காய் கறி வண்டியில் குழந்தைகளுடன் ஜாலியாக இருக்கும் விஜய்!! 1

இவர் மகேஷ் பாபுவின் நடிப்பில் வெளியான “மஹரிஷி” என்ற 2019ஆம் படத்திற்காக சிறந்த முழு பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதை பெற்றவர் ஆவார். அதே பெரிய தயாரிப்பாளரும், விநோயிகிஸ்தருமான ‘தில்’ ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார். இவர்கள் மட்டுமின்றி இப்பொது தெலுங்கில் முன்னணியில் இருக்கும் நாயகியான ரஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தமன், காமெடி நடிகர் பிரமானந்தம், துணை நடிகர் ஜெயசுதா, பிரகாஷ் ராஜ் என நிறைய தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான, பரிட்சியமான முகங்கள் படத்தில் பலர் உள்ளனர்.

விளம்பரம்

"இந்த பொங்கல் நமக்கு செம்ம கலெக்ஷன்"!! Second look'இல் காய் கறி வண்டியில் குழந்தைகளுடன் ஜாலியாக இருக்கும் விஜய்!! 3

ஹைதராபாதில் அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸில் செட் அமைத்து துவங்கிய படப்பிடிப்பு இப்பொது சென்னையில் 2வது கட்டப்படப்பிடிப்பை துவங்கியுள்ளது. துவங்கிய முதலே படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் வெளியான வண்ணம் உள்ளன. இப்பொது படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகை குஷ்பூ, ரஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜயின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

Pic Twitter Account: Vijay Fans Club

இருப்பினும் படக்குழு அதனை குறித்து எந்த வித அச்சமும் இன்றி அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மும்முரமாக நடந்து வருகிறது. மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கொண்டு வர ஆயுதமாகி வருகிறது படக்குழு. இதனால் விரைவில் அடுத்தடுத்த ப்ரோமோஷன் பணிகளையும் மேற்கொள்ள தயராகிருக்கிறார்கள்.நேற்று முதல் போஸ்டர் வெளியாகிய நிலையில்  தன்னுடைய 48வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய் ரசிகர்களுக்கு பரிசாக “தளபதி 66” படக்குழு, அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டது.

விளம்பரம்
தொடர்புடையவை  பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிர்ச்சி சிவா சொன்னா கவிதை! சிரிப்பில் அதிர்ந்த அரங்கம்!!

"இந்த பொங்கல் நமக்கு செம்ம கலெக்ஷன்"!! Second look'இல் காய் கறி வண்டியில் குழந்தைகளுடன் ஜாலியாக இருக்கும் விஜய்!! 6

இப்பொது மீண்டும் இன்று பிறந்தநாள் பரிசாக விஜய் கலர்ஃபுல்லாக இருக்கும் படத்தின் இரண்டாவது போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார்.இந்தபடம் வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. முதல் போஸ்டரில் கிளாஸ்ஸாக இருந்த விஜய் இந்த போஸ்டரில் கொஞ்சம் மாஸாக குழந்தைகளுடன் காய் கறி வண்டியில் அமர்க்களமாக செல்கிறார்.

விளம்பரம்

"இந்த பொங்கல் நமக்கு செம்ம கலெக்ஷன்"!! Second look'இல் காய் கறி வண்டியில் குழந்தைகளுடன் ஜாலியாக இருக்கும் விஜய்!! 8

விளம்பரம்

Leave a Comment