Categories: சினிமா

கணவருடன் செம்ம கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு திருமண நாள் வாழ்த்து சைத்ரா ரெட்டி..!

வெளியிட்டது

நடிகை சைத்ரா ரெட்டியை தெரியாதவர்கள் இருக்க முடியாது அந்தளவிற்கு சின்னத்திரையில் நாயகியாக பெயர் எடுத்து உள்ளவர். கயல் சீரியல் மூலம் கதாநாயகியாக நடித்து இன்று பல ரசிகர்களை கொண்டு கலக்கி வருகிறார். யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலம் வில்லியாக சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார். பின்னர் அந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்து கலக்கி இருந்தார்.

கணவருடன் செம்ம கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு திருமண நாள் வாழ்த்து சைத்ரா ரெட்டி..! 1

தற்போது கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் சைத்ரா. மேலும் படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவர் அண்மையில் சொந்தமாக மாட்டு பண்ணை தொடங்கி இருந்தார். ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது தனது அடுத்த ஆடை விற்பனை தொழிலை தொடங்கி அசத்தி வருகிறார். கயல் சீரியல் மூலம் இவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

தற்போது இவருக்கு திருமணமாகி 4ஆண்டுகள் ஆகிய நிலையில் , கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் சைத்ரா ரெட்டி. இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்