சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா எனும் சீரியலில நடித்து வந்த ஸ்வேதா பண்டேகர் தற்போது கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருக்கிறார். மேலும் அவர் கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் மெட்டர்னிட்டி புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அவருக்கு வீட்டிலேயே வைத்து எளிமையான முறையில் வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் புதிய புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடர் தான் சந்திரலேகா. இதில் எட்டு ஆண்டுகளாகவும் கதாநாயகியாக நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் ஸ்வேதா.
ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த அவர், தல அஜித் குமார் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அறிமுகமானார்.
பின்னர் பூவா தலையா, மீராவுடன் கிருஷ்ணன், நான் தான் பாலா, வள்ளுவனும் வாசுகியும், பூலோகம் போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது சந்திரலேகா தொடர் தான்.
37 வயதான நிலையில் அவருக்கு திருமணம் ஆகாமல் இருந்தது. பின்னர் சன்மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மால் மருகா என்பகுருடன் அவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் ஸ்வேதா.
சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடந்து முடிந்திருந்தது. அந்த வளைகாப்பு புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் பிரபலங்கள் செய்யும் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் எனப்படும் கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.
பலரும் ஸ்வேதாவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.!