இனி கஸ்தூரி தான் புது பாக்யாவா.? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.! உண்மை இதுதான்.!

நடிகை கஸ்தூரி இனிமேல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலெட்சுமி சீரியலில் பாக்யாவாக நடிக்க இருப்பதாக இன்று காலை முதலே ஒரு புதிய தகவல் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அது குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது் விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் பொழுது நிகழ்ச்சியாக பாக்யலட்சுமி சீரியல் இருந்து வருகிறது.

இனி கஸ்தூரி தான் புது பாக்யாவா.? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.! உண்மை இதுதான்.! 1

விளம்பரம்

பெண்கள், ஆண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு குடும்ப பங்கான நிகழ்ச்சியாக இது ருந்து வருவதால் பலரின் ஃபேவரட் நாடகமாக மாறி இருக்கிறது.

படிப்பறிவு கொஞ்சம் கூட இல்லாத குடும்பத்தலைவி தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலின் கதைப்படி பாக்யாவிற்கு கல்லூரி சென்று படித்தி பட்டதாரி ஆகும் ஆசை வந்திருக்கிறது. இதனால் தனது மகள் படிக்கும் கல்லூரியிலேயே அவரும் ஒரு சேர்ந்து படிக்கப் போவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  சீரியலை முடிச்சி தொலைங்கடா.! இயக்குனர் காலில் விழுந்து கதறும் ரசிகர்கள்

இனி கஸ்தூரி தான் புது பாக்யாவா.? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.! உண்மை இதுதான்.! 3
இப்படி பல ட்விஸ்ட்டுகளுடன் நடந்து வரும் இந்த சீரியலில் இன்று காலை முதலே பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை கஸ்தூரி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் பாக்கியலட்சுமி சீரியல் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. நடிகை சுசித்ரா தற்போது பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

பலரும் இந்த தகவலின் உண்மைத் தன்மையை அறியாமல் கஸ்தூரி இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால் உண்மையில் கஸ்தூரி தெலுங்கில் ஒளிபரப்பாகும் “இன்டிட்டிடி குரு லட்சுமி” என்கிற பாக்கியலட்சுமி சீரியலின் தெலுங்கு வெர்ஷனில் நடித்து வருகிறார். அவர் சில நாட்களாகவே இந்த சீரியலில் நடித்து வரும் நிலையில் தற்போது தமிழில் பாக்யாவாக கஸ்தூரி நடிக்க இருக்கிறார் என்ற தவறான தகவலை சிலர் பரப்பி விட அதை நம்பி ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.! தற்போது இந்த தகவலில் உண்மை இல்லை என்பதை அறிந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  மகனை வைத்து சாண்டி மாஸ்டர் செய்த செயல்.! இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..வேற லெவல் சாண்டி நீங்க

YouTube Video Embed Code Credits: Star Maa

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment