பாடகர் அந்தோணி தாசனின் மகள் தற்போது கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றிருக்கும் புகைப்படங்களை அந்தோணி தாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கான்வென்ட் காலேஜ் என்று கல்விச்சாலைகளை காணாத என் வாழ்வில் என் மகள் பட்டம் பெற்றது மகிழ்ச்சி என்று அவர் இந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் பல நாட்டுப்புறக் கலைஞர்கள் இருந்தபோதிலும் சிலர் மட்டுமே மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடிக்கின்றனர். அந்த வகையில் நாட்டுப்புற கலையையே தன் உயிராக கொண்டிருக்கும் அந்தோணி தாசனின் மகள் கல்லூரி முடித்து முதல் தலைமுறை பட்டதாரியாக மாறி இருக்கிறார். அந்த புகைப்படங்களை பகிர்ந்து தற்போது அந்தோணி தாசன் நெகிழ்ந்திருக்கிறார்.

2007 ஆம் வெளியான திண்டுக்கல் சாரதி படத்தில் திண்டுக்கல்லு திண்டுக்கல்லு என்கிற பாடலில் கிரேஸ் கருணாஸ் மற்றும் சின்ன பொண்ணுவுடன் இணைந்து பாடியதன் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பாடகர் அந்தோணி தாசன். அதன் பின்னர் பல படங்களில் பாடியிருக்கும் அவருக்கு காசு பணம் துட்டு மணி மணி என்கிற பாடல் தான் திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் பல படங்களில் பாடிவரும் அந்தோணி தாசன் யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் என்கிற பாடலின் மூலமாக பல குடும்பங்களில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறார். இந்த பாடல் ஒலிக்காத குடும்ப நிகழ்வுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

அதன் பின்னர் அந்தோணி தாசன் பல நல்ல பாடல்களை தமிழ் திரையுலகிற்கு வழங்கி வருகிறார். தற்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராகவும் பங்கேற்று இருக்கிறார்.

கணீர் குரலுக்கு சொந்தக்காரரான அந்தோணி தாசன் ஆரம்பத்தில் குடும்ப வறுமை காரணமாக திருவிழாக்களில் பபூன் வேஷம் அணிந்து நடிக்க ஆரம்பித்தார். பின்னர் குறவன் குறத்தி போன்ற வேடங்கள் ஏற்றும் ஆடி இருக்கிறார்.

அப்போது இவருடன் பணியாற்றிய ரீட்டா என்கிற பெண்ணுடன் காதல் மலர்ந்து. இந்த காதல் திருமணத்தில் முடிந்தது. இந்த தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கும் நிலையில் அந்தோணி தாசனின் மகள் கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியிருக்கிறார்.

அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த அந்தோணி தாசன் கான்வென்ட் காலேஜ் என்று கல்விச்சாலைகள் காணாத என் வாழ்வில் என் மகள் படித்து பட்டம் பெற்றதில் பேரானந்தம்.

கடவுளுக்கு நன்றி என்று சொல்லி அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. தான் கஷ்டப்பட்டு பிள்ளைகளை பட்டப்படிப்பு படிக்க வைத்த அந்தோணி தாசனுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.