சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை 18 ஆண்டுகள் கழித்து தற்போது வெளியிட்டுள்ளனர். சந்திரமுகி பாகம் 2 நாளை திரையில் வெளியாக இருக்கும் நிலையில், முதல் பாகத்தின் மேக்கிங் வீடியோவை தற்போது படக் குழுவினர் வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் எடுக்கப்பட்டது தான் சந்திரமுகி. பி வாசு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. 90ஸ் கிட்ஸ்களில் ஃபேவரைட் படமாகவும், அவர்களைப் பயமுறுத்திய பேய் படமாகவும் சந்திரமுகி விளங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், லட்சுமிமேனன், கங்கணா ரணாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார் போன்ற நடிகர்கள் பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க நாளை இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது சந்திரமுகி பாகம் ஒன்றின் மேக்கிங் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி பாகம் 1 மேக்கிங் வீடியோவை சுமார் 18 ஆண்டுகள் கழித்து வெளியிட்டு படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். நீங்களும் வெளியாகியிருக்கும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளப் வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: AP International