அந்த சம்பவத்துக்கு அப்புறம் எனக்கு எந்த வாய்ப்பும் வரல.! கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ்

சரக்கு பட இசை வெளியீட்டு விழாவில் தான் நடந்து கொண்ட விதத்திற்கு பின்னர் தனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை என்று கூல் சுரேஷ் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். குறும்புத்தனமாக ஏதாவது செய்கிறேன் என்கிற பெயரில் அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக் கொள்ளும் ஒரு நபராக இருந்து வருகிறார் கூல் சுரேஷ். கடந்த வாரம் மன்சூர் அலிகான் நடித்து வரும் சரக்கு என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், அந்த இசை விழாவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஐஸ்வர்யா கழுத்தில் மாலைப் போட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியிருந்தது. தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது யூடியூபர்ஸிடம் பணம் கேட்டு மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

cool suresh

விளம்பரம்

அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடித்து பெரிய ஆளாக வர முடியவில்லை என்பதால் கிறுக்குத்தனங்களை செய்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். ஜாலியாகத்தான் மாலை போட்டேன். அந்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று முதலில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பலரும் தங்களது youtube பக்கத்தில் போட்டு பார்வையாளர்களை அள்ளி இருந்தனர். இது குறித்து மற்றொரு வீடியோ வெளியிட்டு இருக்கும் அவர், நான் செய்தது தவறுதான். பலரும் கண்டனம் தெரிவித்து அட்வைஸ் செய்து வருகின்றனர். பிரபலம் ஒருவரது மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதற்கு உதவி செய்தேன். ஆனால் அவரெல்லாம் இப்போது எனக்கு அட்வைஸ் செய்கிறார்.

தொடர்புடையவை  உங்கள எப்படி கரெக்ட் பண்றது? ஸ்னேகாவுக்கு ரோஸ் கொடுத்து ப்ரொபோஸ் செய்த ஆர்யா

அந்த சம்பவத்துக்கு அப்புறம் எனக்கு எந்த வாய்ப்பும் வரல.! கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ் 2

விளம்பரம்

நான் மன்னிப்பு கேட்ட வீடியோவை யூடியூபில் போட்டு பல யூடியூபர்கள் பணம் சம்பாதித்துள்ளனர். எனது வீடியோ மில்லியன் வியூஸ் வரை சென்றது. அந்த இசை விழா வீட்டுக்கு பின்னர் எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. மிகவும் கஷ்டத்தில் உள்ளேன். இதை புரிந்து கொண்டு யூடியூபர்ஸ் எனக்கு பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனது செல் நம்பர் நிறைய பேரிடம் இருக்கிறது. எனக்கு அவர்கள் உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன். இனி எந்த ஒரு தவறும் ஈடுபட மாட்டேன் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.! நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.0

விளம்பரம்

Leave a Comment