Categories: சினிமா

பிறந்தநாளுக்கு கூட வராத மகன்..ஆனால் மகனுக்காக தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்..பெத்த மனம் பித்து தானே

வெளியிட்டது

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கும் விசயம் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தனியாக அமர்ந்து கேக் வெட்டிய விவாகரம் தான். இந்த செய்தியை பார்த்த பலரும் விஜயை விமர்சித்து இருந்தனர். இன்று விஜய் உச்ச நட்சத்திரமாக இருக்க முக்கிய காரணம் அவரது தந்தை எஸ்ஏசி தான். ஒரு பேட்டியில் கூறும் போது விஜய் முதல் படத்தில் நடித்த போது அந்த படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை, ஒரே ஒரு தயாரிப்பாளர் மட்டும் வந்தார், அவரிடம் படத்தை போட்டுக் காட்டியபோது இந்த மூஞ்சியெல்லாம் எவன் பார்ப்பான் என்று தயாரிப்பாளர் கோபமாக கூறி விட்டு சென்றதாகவும், அப்போது வைராக்கியம் வைத்து தனது மகனை பெரிய ஹீரோ ஆக்கியதாகவும் எஸ்ஏசி கூறியிருந்தார்.

பிறந்தநாளுக்கு கூட வராத மகன்..ஆனால் மகனுக்காக தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்..பெத்த மனம் பித்து தானே 1

ஆனால் அப்படிப்பட்ட தனது தந்தையின் 80வது பிறந்தநாள் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. அந்த புகைப்படத்தில் யாரோ ஒரு 3 பேர் மற்றும் மனைவி ஷோபாவுடன் அமர்ந்து தனியாக கேக் வெட்டிக் கொண்டிருந்தார் சந்திசேகர். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும்வேதனை அடைந்தனர். விஜய் ரசிகர்கள் சிலரே விஜயை கடிந்து கொண்டனர். தந்தை பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லக்கூட மனமில்லையா? ஆனால் படங்களிலும், ஆடியோ வெளியீட்டு விழாக்களிலும், தாய் தந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று ரசிகர்களுக்கு பக்கம் பக்கமாக அறிவுரை கூறுகிறீர்களே என்று விஜயை திட்டி பலர் பதிவிட்டு இருந்தனர். விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே சில வருடங்களாகவே பேச்சுவார்த்தை இல்லை. விஜய் ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றுவது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்ததாக தெரிகிறது.

பல நாட்களாக இருவரும் சந்தித்துக் கொள்ளவேயில்லை. மாதம் ஒருமுறையாவது எங்களை வந்து சந்தித்துவிட்டு போ விஜய் என்று மீடியாக்களில் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார் விஜய். இது விஜய் தரப்பை இன்னும் கோப்படுத்தியது. விஜயை வேண்டுமென்றே டேமேஜ் செய்ய இவ்வாறு நடந்து கொள்கிறார் எஸ்ஏசி என்று விஜய் ரசிகர்கள் ஒருபுறம் குமுறி வருகின்றனர். இந்த நிலையில் 80 வயது நிறைவடைந்ததையடுத்து திருக்கடையூர் அபிராமி கோவிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார் எஸ்.ஏ.சி. ஆயுள் விருத்தி ஹோமம் செய்த அவர் தனது மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று விஜய் பெயரிலும் அர்ச்சனை செய்தார். மேலும் அங்கு வந்த பக்தர்களுக்கு தனது கையால் பிரசாதம் வழங்கினார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்