2002ம் ஆண்டு வெளியான மெட்டி ஒலி சீரியலை யாரும் மறந்திருக்க முடியாது. 90’ஸ் கிட்ஸ்கள் பலரும் வீட்டில் இரவு 8 மணிக்கு ஒலிக்கத் தொடங்கும் அம்மி அம்மி அம்மி மிதித்து பாடலை கேட்டவுடன் ஓடி வந்து டிவி முன்பு அமர்ந்த காலங்களும் உண்டு. இந்த நாடகத்தை மெட்டிஒலி நாடகத்தில் நடித்திருந்த திருமுருகனே இயக்கியிருந்தார். ஐந்து பெண் பிள்ளைகளை பெற்ற அப்பா அவர்களை திருமணம் செய்து கொடுக்க பட்ட கஷ்டங்களும், பிறகு அவரது மகள்கள் படும் கஷ்டங்களையும் பற்றிய கதை. எளிய குடும்பங்களின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலித்ததால் இந்த நாடகத்தை பலரும் விரும்பி பார்த்தனர். இதில் மூன்றாவது தங்கையாக லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் வனஜா. இவரது தங்கை உமாவும் இந்த நாடகத்தில் லீலாவின் தங்கையாக விஜி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

சில காலமாக எந்தவொரு சீரியலிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்து வந்தார். பின்னர் வெகு நாட்களுக்குப் பிறகு ஜூ தமிழில் ஒளிபரப்பான ராஜா மகள் சீரியலில் பைரவி என்ற கேரக்டரில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். இடையில் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சிங்கம் படத்தில் ஒரு விபச்சாரம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மெட்டி ஒலி போன்ற நாடகங்களில் குடும்பபாங்காக நடித்துவிட்டு இப்படி நடித்து இருக்கிறீர்களே என்று அவர் மீது அப்போது விமர்சனம் வைக்கப்பட்டது. வனஜாவின் கணவர் இயக்குனர் ஹரியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். ஆனால் சிங்கம் படத்தில் நடித்துபோது இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. வெகுநாட்களுக்குப் பிறகு சிங்கம் படத்தில் நடந்த கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார் வனஜா.

ஷூட்டிங்கில் ரவுடி கேரக்டர் போன்ற கேரக்டருக்காக உண்மையான பான் பராக்கை கொடுத்து என்னை போட சொன்னார்கள். அப்போது சுற்றி இருந்த கூட்டத்தைப் பார்த்தவுடன் எனக்கு அழுகையே வந்துவிட்டது என்றும் கூறினார். பின்னர் தனது தந்தை சமாதானம் செய்த காரணத்தால் அந்த சீனில் நடித்து கொடுத்ததாகவும் மேலும் புடவையை எல்லாம் கழற்ற சொன்னார்கள் நான் அவ்வாறு செய்ய முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். துணை இயக்குனராக இருந்த தனது கணவர் இந்த சீன் பற்றியெல்லாம் தன்னிடம் சொல்லமலேயே நடிக்க அழைத்து வந்தார் இதனால் செம்ம கடுப்பில்தான் அந்த சீனை நடித்து முடித்தேன் என்றும் அவர் கூறினார்.
Mettti Oli #Vanaja About #Surya #Singam pic.twitter.com/91VKstflQU
— chettyrajubhai (@chettyrajubhai) July 4, 2022