43வது சென்னை புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 9ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் சார்பில் வெளியான அறிக்கையில் வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் 13-ம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக 3,000 சதுரஅடி அளவில் ‘கீழடி-ஈரடி’ அமைக்கப்பட உள்ளது. அங்கு திருக்குரள் மற்றும் கீழடி தொடர்பான அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பிகப்பட உள்ளது. கீழடியிலிருந்து தோண்டி எடுக்கப்பெற்ற கலைப்பொருட்களின் பிரதிகளை காட்சிப்படுத்திட, தமிழ்நாட்டு தொல்பொருள் துறை ஒப்புக் கொண்டுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இப்புத்தகக் திருவிழா வேலை நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இதற்கான நுழைவு கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.