Categories: சினிமா

நடிகர் சித்தார்த் நடித்துள்ள “சித்தா” படத்தின் ட்ரைலர் வெளியானது.! வீடியோ உள்ளே.!

வெளியிட்டது

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள சித்தா படத்திலிருந்து தற்போது டீசர் வெளியாகி இருக்கிறது. மகளுக்காக ஏங்கும் தந்தையின் பாசத்துடன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய திரை உலகின் இளம் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சித்தார்த். இவர் 2003ம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி, பின்னர் பல படங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டக்கர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சித்தார்த் நடித்துள்ள "சித்தா" படத்தின் ட்ரைலர் வெளியானது.! வீடியோ உள்ளே.! 1
பல நல்ல கதைகளில் நடித்திருந்த போதிலும் சித்தார்த்துக்கு இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருந்த போதிலும் மனம் தளராமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ‘சித்தா’ என்கிற படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்தப் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கிறார் விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் சேதுபதி சிந்தாபாத் போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சித்தார்த்தே இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.


இந்தப் படத்தின் ட்ரைலரை பார்க்கும் பொழுது சித்தார்த் குழந்தைக்கு அப்பாவாக இருப்பது போலவும் குழந்தைக்கு ஏதோ ஆபத்து நடந்ததுவிட்டது போலவும் ஆரம்பத்தில் காண்பிக்கப்படுகிறது. பின்னர் அவளைத் தேடி சித்தார்த் நெடிய பயணம் போவது போலவும் “ஒரு குழந்தைக்காக இன்னும் எவ்வளவு தூரம் செல்லப் போகிறீர்கள்? என்கிற வரிகளுடன் இந்த ட்ரைலர் நிறைவடைந்து இருக்கிறது. படம் வருகிற 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது டீசர் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்