Categories: சினிமா

“ஹரே, எமிரா இதி”!!தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தட்டி எழுப்பி சிரித்து கொண்டே போட்டோவிற்கு போஸ் கொடுத்த பாலகிருஷ்ணா.

வெளியிட்டது

தெலுங்கு சினிமாவின் மிக முக்கிய நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா. பிரபல பழம்பெரும் நடிகரும் ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த திரு.நந்தமூரி தாரக ராமராவ் அவர்களின் கலையுலக வாரிசு இவர். குழந்தை நட்சத்திரமாக துவங்கி, பின்னர் நாயகனாக உருமாறி மங்கம்மா காரி மனவடு, அபூர்வ சஹோதரலு, முத்துள்ள மாவையா, ஆதித்யா 369, நாரி நாரி நடும முராரி, பங்காரு புல்லோடு, பைரவ தீபம், போப்பிலி சிம்ஹம், சமரசிம்ஹ ரெட்டி, நரசிம்ம நாயுடு, சென்னகேசவ ரெட்டி, சிம்ஹா, லெஜெண்ட், கவுதமிபுத்ரா சாதகர்ணி, அகண்டா போன்ற பல மாபெரும் வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

"ஹரே, எமிரா இதி"!!தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தட்டி எழுப்பி சிரித்து கொண்டே போட்டோவிற்கு போஸ் கொடுத்த பாலகிருஷ்ணா. 1

 

கடந்த 8 ஆண்டுகளாக ஆந்திராவிலுள்ள ஹிண்டுபுர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவரை, நம்முடைய தமிழ் ரசிகர்களுக்கு இந்த இவரின் அசத்திய நம்பமுடியாத ஆக்ஷன் காட்சிகளுக்கே ஞாபகம் வைத்துள்ளனர். தொடையை தட்டி ட்ரெயினை பின்னாடி அனுப்பும் இவருடைய ஆக்ஷன் காட்சி இன்றளவும் ரசிகர்களிடம் மிக பிரபலம்.

மேலும் பல சர்ச்சை பேச்சுக்கும் இவர் பெயர் போனவர். ஒரு விருது விழாவில், என்னுடைய ரசிகர்கள் நான் நடிகையுடன் கவர்ச்சியாக நடிப்பதையே எதிர்பாக்கிறாரகள் என பேசி சர்ச்சையை கிளப்பினார். அண்மையில் கூட ஆஸ்கர் விருது பெற்ற ஏஆர் ரஹ்மானையே தனக்கு யாரென தெரியாது என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். மேலும் பாரத ரத்னா விருதெல்லாம் தனது தந்தையின் கால் தூசுக்கு சமம் என்று பேசியும் ரணகளப்படுத்தினார். இப்படி நண்டமுரி பாலாகிருஷ்ணா பேசிய சர்ச்சை விஷயங்கள் ஏராளம்.

இன்றளவும் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் பாலகிருஷ்ணா. அதேநேரத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். தனது கட்சி தொண்டரையே அடித்தது, போட்டோ எடுக்க முயன்ற ரசிகரை அடித்தது, பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது என இருந்து வருகிறார்.

இந்நிலையில் தூங்கிய குழந்தையை அடித்து எழுப்பி நந்தமுரி பாலகிருஷ்ணா செல்பி எடுத்தது விவாதப் பொருளாகியுள்ளது. அதாவது இந்துபூர் பகுதியில் நடிகர் பாலகிருஷ்ணாவின் ரசிகர் மன்ற தலைவர் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றார் பாலகிருஷ்ணா. அப்போது ரசிர்களும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களும் அவருக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

பின்னர் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர். இதையடுத்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார் பாலகிருஷ்ணா. அப்போது ரசிகர் ஒருவர் குழந்தையுடன் வந்திருந்தார். குழந்தை அசந்து அப்பாவின் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. இதனைக் கவனித்த நந்தமுரி பாலகிருஷ்ணா அந்த குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்துக்கொண்டார்.

தூங்கிய குழந்தையை அடித்து எழுப்பி பாலகிருஷ்ணா செல்பி எடுத்தது தற்போது விவகாரமாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த குழந்தைக்கு நீங்கள் யார் என்றே தெரியாது, அதனை அடித்து எழுப்பி செல்பி எடுக்க வேண்டிய அவசியம் என்ன என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் குழந்தைகளிடமும் இப்படிதான் நடந்துகொள்வீர்களா என்றும் கேட்டு வருகின்றர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்