ஷாரிக்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜூலி போட்ட பதிவு.! லவ் பண்றங்களா? ரெண்டு பேரும்

பிக்பாஸ் புகழ் ஜூலி, ரியாஸ் கான் மகன் ஷாரிக் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து எனது ஆத்மாவின் புத்துணர்ச்சி இவன்தான் என்று பகிர்ந்துள்ளார். இதனால் இவர்கள் நட்பு காதலாக மாறியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு நட்புடனே இருக்குமா அல்லது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறதா என்று ஜூலியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜூலி. நர்சாக வேலை பார்த்துக் கொண்டிருந்த இவர், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் தான் வெளிச்சத்திற்கு வந்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே, அதை இவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஷாரிக்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜூலி போட்ட பதிவு.! லவ் பண்றங்களா? ரெண்டு பேரும் 1

விளம்பரம்

ஓவியாவுடன் சண்டைக்குப் பிறகு ஜூலியின் பெயர் மிகவும் கெட்டுப்போனது. ஜூலியும் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட ரியாஸ்கான் மகன் ஷாரிக்கும் கலந்து கொண்டார். இங்கே இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. இதை பார்த்த பலரும் ஷாரிக்கும் ஜூலியும் காதலித்து வருகின்றனர் என்று கூறி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் நண்பர்களாக பழகி வரும் நிலையில், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் இதையெல்லாம் இருவரும் மறுக்கவும் இல்லை, ஒப்புக் கொள்வும் இல்லை. ஜூலி மற்றும் ஷாரிக் தொடர்ந்து நண்பர்களாகவே பயணித்து வந்தனர்.

தொடர்புடையவை  தர்பார் படத்தின் மோஷன் பிக்சர் வெளியீடு!

ஷாரிக்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜூலி போட்ட பதிவு.! லவ் பண்றங்களா? ரெண்டு பேரும் 3

விளம்பரம்

இந்த நிலையில் ஜூலி தற்போது தங்க instagram பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, இவன் எனது உண்மையான நண்பன், எனது ஆன்மாவின் புத்துணர்ச்சி என்று அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது. மேலும் பலரும் உங்களது நட்பு காதலாக மாறுமா என்ற கேள்வியை அவர்களிடமே கமெண்ட்டில் எழுப்பி வருகின்றனர். 25 வயதாகும் ஷாரிக் 2016 ஆம் ஆண்டு வெளியான பென்சில் படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். சரியான வாய்ப்பு கிடைக்காததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் சீசன் அல்டிமேட்டில் பங்கேற்ற அவர் 21வது நாளில் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பின்னர் ஷாரிக் மற்றும் ஜூலி நட்பு தொடர்ந்து வருகிறது.

விளம்பரம்

Leave a Comment