Categories: உலகம்

பதில் அளிக்குமா சீனா!!

வெளியிட்டது
பதில் அளிக்குமா சீனா!! 1

இந்தியாவின் அண்டை நாடான பாக்கிஸ்தானை., தொடர்ந்து பயங்கரவாதிகள் அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வரும் நாடாக சீனா விளங்குகிறது; இந்தியாவில் தாக்குதல் நடத்தும்படி துாண்டி வருகிறது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்தியா – பாக்கிஸ்தான் இடையேயான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தீவிரமாக உள்ளது.

‘பாக்கிஸ்தான் , பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும்’ என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உட்பட பல நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், அப்போதெல்லாம் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக, சீனா செயல்பட்டது.சீன அதிபர் ஸீ ஜின்பிங், சமீபத்தில், தமிழகத்தின் மாமல்லபுரம் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போதும், அவரிடம் பிரதமர் மோடி, பயங்கரவாத பிரச்னைகள் குறித்து பேசினார் என்று தெரிகிறது. ஆனால், அது தொடர்பாக ஜின்பிங் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை .சர்வதேச அமைப்புகளில் பேசும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பயங்கரவாதத்தை தடுப்பது குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.தற்போது பிரிக்ஸ் மாநாட்டிலும் இந்தப் பிரச்னையை எழுப்ப மோடி திட்டமிட்டிருக்கிறார். இனியாவது, சீனா வாயைத் திறந்து பதில் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்